Menu
Your Cart

விடுதலைப் போரில் தமிழகம் (3 தொகுதிகள்)

விடுதலைப் போரில் தமிழகம் (3 தொகுதிகள்)
விடுதலைப் போரில் தமிழகம் (3 தொகுதிகள்)
-5 % Out Of Stock
விடுதலைப் போரில் தமிழகம் (3 தொகுதிகள்)
விடுதலைப் போரில் தமிழகம் (3 தொகுதிகள்)
விடுதலைப் போரில் தமிழகம் (3 தொகுதிகள்)
ம.பொ.சிவஞானம் (ஆசிரியர்)
₹1,283
₹1,350
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுமார் 1250 பக்கங்களுக்கும் மேலாக மூன்று தொகுதிகளில் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம் அவர்களின் எழுத்தோவியத்தில் வெளிவந்திருப்பதும் TNPSC, UPSC, Civil Services ஆகிய ஆட்சிப் பணியாளர் தேர்வுகளுக்கும் மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தருவதுமான "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற இந்நூல் வரலாற்றுப் பதிவுகளின் கருவூலம் எனலாம். இந்தியாவின் நீண்ட கால வரலாற்றை ஆராய்ந்தால் அன்னிய நாட்டினரால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், தமிழகத்தை விட்டுவிட்டு எஞ்சிய இந்தியாவை மட்டும் அடிமைப்படுத்தியதென்றொ, எஞ்சிய இந்தியாவை விட்டுவிட்டு தமிழகத்தை மட்டும் அடிமைப்படுத்தியதென்றொ சொல்வதற்கில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மொகலாய ஆக்கிரமிப்பும் சரி; பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆக்கிரமிப்பும் சரி; வட இமயம் தொடக்கி தென் குமரி வரையுள்ள இந்தியா முழுவதையும்தான் அடிமைப்படுத்தியதனை வரலாறு காட்டுகிறது. ஆகவே, தமிழன் தனது விடுதலைக்காக போராடியதனை தேச பக்தியோடு அணுகி அனைத்திந்திய கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டியது அவசியமாகிறது. அப்படித்தான் இந்நூலும் படைக்கப்பட்டுள்ளது. "விடுதலைப் போரில் தமிழகம்" என்னும் பெயரைப் பெற்றிருப்பினும், இந்திய விடுதலைப் போர் சம்பந்தப்பட்ட அனைத்திந்திய நிகழ்ச்சிகள் எல்லாம் இதிலே தரப்பட்டுள்ளன. இதனைப் படித்து முடித்தால், இந்திய விடுதலைப் போர் முழுவதையும் படித்தது போன்ற மனநிறைவு ஏற்படும். இது இந்நூலுக்குள்ள தனிச் சிறப்பு ஆகும்.
Book Details
Book Title விடுதலைப் போரில் தமிழகம் (3 தொகுதிகள்) (TAMIL NADU in FREEDOM FIGHT in Tamil )
Author ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnaanam)
Publisher வர்த்தமானன் பதிப்பகம் (varththamanam Pathipagam)
Pages 1250
Year 1982
Edition 2
Format Paper Back
Category India History | இந்திய வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலி..
₹418 ₹440
ஒரு பொருளுக்கு மக்களிடையே மதிப்பு ஏற்படும்போது அதைப்போன்ற போலி ஒன்றும் கூடவே தோன்றும். இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். சான்றாக, கதர் வாணிபம் நன்றாக நடக்கிறதென்றால், சில மோசக்கார வியாபாரிகள் போலிக்கதர் தயாரித்து மக்களை ஏமாற்றுவார்கள். அதுபோலவே சீர்திருத்தக் கொள்கைக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறதென..
₹29 ₹30
தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலிலே சாதி உணர்ச்சி தலைதூக்கி நின்றிருக்கிறது. சனநாயகப்படி நடந்த பொதுத் தேர்தல்களிலே, அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பதிலேயும் இந்த சாதி உணர்ச்சியே செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இதனால் தமிழினத்தின் ஒற்றுமை பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ..
₹238 ₹250