Menu
Your Cart

வியத்தகு இந்தியா

வியத்தகு இந்தியா
-5 %
வியத்தகு இந்தியா
ஏ.எல்.பாஷம் (ஆசிரியர்), க.பூரணச்சந்திரன் (தமிழில்)
₹827
₹870
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்திய வரலாறு, பண்பாடு, இந்திய மக்கள் தங்கள் வேர்களுடன் இன்னும் இணைந்திருக்கும் விதம் ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த நூல் பண்பாடு, சமயம், ஆட்சிமுறை, சமூகப் பரிணாமம், பாரம்பரியம், மொழிகள், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான இந்திய வரலாற்றைப் பேசுகிறது. அத்துடன் ஹரப்பா நாகரிகமும் குடியேற்றமும் நிகழ்ந்த காலம் முதல் ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாடு வரையிலான இந்தியாவின் கடந்தகால உன்னத நிலையை வெளிப்படுத்துகிறது. இதற்காகச் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடங்கி ஹரப்பா, மொஹஞ்ச-தாரோ பற்றிய விரிவான தகவல்களுடன், இந்தியாவின் வளமான பண்பாட்டு மரபை வெளிச்சமிட்டுத் தொடக்கக்காலக் கட்டங்களை இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. மேலும் இந்திய வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களையும் சகாப்தங்களையும் விரிவான பனுவல் ஆதாரத்துடன் கண்டடைகிறது; கதை வடிவிலான, எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விவரிப்பு, வாசகரை ஈடுபாட்டுடன் வைக்கிறது. ஏராளமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் வழியாக ஹரப்பா காலத்திலிருந்தும் ஆரியர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த காலத்திலும் பின்பற்றப்பட்ட இந்துமதத்தின் பரிணாம வளர்ச்சியையும் நூலாசிரியர் இந்த நூலில் விளக்கியுள்ளார். இந்திய வரலாறு, பண்பாடு பற்றிய சுவையான உண்மைகளை அறிய விரும்புவோருக்கு இந்தப் புத்தகத்தில் ஏறக்குறைய அனைத்தும் உள்ளன—பண்டைய படையெடுப்புகளின் தடயங்கள் முதல் நவீனகாலப் பரிணாமம் வரை வாசகர்கள் மகிழ்ச்சியுறுவதற்கும் ஏன் அறிவைப் பெறுவதற்கும்கூட உதவுகிறது. ** மூன்றாவது ஆங்கிலப் பதிப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த நுட்பமிகு புதிய பதிப்பில், ஏராளமான படங்களும் நூலாசிரியர் தம் வாழ்நாளில் இறுதியாகச் செய்த சேர்ப்புகளும் பாஷமின் மாணவரான பேராசிரியர் தாமஸ் ஆர். டிரௌட்மனின் முன்னுரையும் இடம்பெறுகின்றன.
Book Details
Book Title வியத்தகு இந்தியா (Viyathagu India)
Author ஏ.எல்.பாஷம்
Translator க.பூரணச்சந்திரன் (Ka.Pooranachchandhiran)
ISBN 978 81 7720 321 9
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 1024
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்கள..
₹124 ₹130
இந்தச் சுருக்கமான அறிமுகம், சமகால இறையியலின் மையமான கேள்விகள் பற்றிய சமச்சீரான ஆய்வை, நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அளிக்கிறது. டேவிட் ஃபோர்டின் விசாரனை ரீதியிலான அணுகுமுறை, பெரும்பாலான பெரிய மதங்களில் பிரதானமாக அமைந்திருக்கும் ஈடேற்றம், பழங்கால, நவீன, பின்நவீனச் சூ..
₹114 ₹120