Menu
Your Cart

ஞானியர் காட்டும் பாதை

ஞானியர் காட்டும் பாதை
-10 %
ஞானியர் காட்டும் பாதை
சி.எஸ்.தேவநாதன் (ஆசிரியர்)
₹162
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஞானம் என்பது கணப்பொழுதில் ஒளிப்பொறியாய் தோன்றி விடுவதுதான். ஆனால், அந்தக் கணத்துக்காக ஒருவர் ஆண்டுக்கணக்கிலும் காத்திருக்கும்படியாகும். ஆம், அதற்குத் தேவையான தகுதியை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா. இறையுணர்வு, இறைக் காதல், இறையானுபவம், இறை ஞானம் – என்ற அநேக படிநிலைகள் உள்ளனவே. ஞானி தன் செயலின் விளைவுகளை இறைவனின் கையில் ஒப்படைத்துவிடுகிறான். அதனால் அவற்றுக்குப் பொறுப்பேற்கும் நிலை இறைவனுக்கு. இந்த இணைப்பை ஏற்படுத்துவது அவர்களுக்கிடையேயான நேசம். அடியான் இறைவனைத் தியானித்திருக்கிறான். இறைவன் அடியானைத் தன் பாதுகாப்பில் வைக்கிறான். ஏமாற்றமும், விரக்தியும் இறைநம்பிக்கை இல்லாதவருக்குத் தான்(அரைகுறை நம்பிக்கை கொண்டவர்க்கும் அதே கதிதான்). நம்பிக்கை என்பது எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்காத, முழுமையான நம்பிக்கையாய் இருக்கவேண்டும். நீங்கள் மிக உயர்ந்த நிலையிலும் தன்னடக்கத்துடன் நடந்துகொண்டால், இறைவன் உங்களை மேலும் உயர்த்துகிறான். உங்கள் உயர்வு குறித்து கர்வம் கொள்வீராயின் இறைவன் உங்களை முன்னிலும் தாழ்ந்த இடத்துக்குத் தள்ளி விடுகிறான். ஞானிகள் எக்காலத்தும், எது பற்றியும் கர்வம் கொள்வதில்லை. இறைநேசர்கள் கண்டதையெல்லாம் கொண்டு தங்கள் இதயத்தை நிரப்புவதில்லை. இறைவனின் வருகைக்காகத் தங்கள் இதயத்தை அவர்கள் தூய்மைப்படுத்தி வைக்கிறார்கள். அவன் உவக்கும்படியாய் அவனை வரவேற்றுக் கொள்கிறார்கள். பள்ளத்தை நோக்கியே வெள்ளம் பாய்கிறது, பணிவிருக்கும் உள்ளத்தை நோக்கியே இறைவன் வருகிறான்.
Book Details
Book Title ஞானியர் காட்டும் பாதை (gnaniyar-kattum-padhai)
Author சி.எஸ்.தேவநாதன் (C.S.Devanathan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2010
Edition 1
Format Paper Back
Category Sufism | சூஃபியிசம், Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha