Menu
Your Cart

ஆண்கள்

ஆண்கள்
-5 %
ஆண்கள்
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு ஆணுக்கு தனது வாழ்க்கையின் ஏதாவது ஒரு பருவத்தில், தன் வாழ்க்கையை நிறுத்தி வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்,, தன் இளமைக் காலத்தில்தான் நிறுத்தி வைத்துக்கொள்வான். இளமைக் காலம்... ஆண்களின் மகத்தான கொண்டாட்டக் காலம். ஒரு முடிவே இல்லாத இனிய கனவு போல் நீண்டுகொண்டிருந்த நமது இளமைக்காலம், எவ்வளவு வேகமாக கலைந்துவிடுகிறது? எவ’வளவு வேகமாக நமது இளமையின் ஈரச்சிறகுகள் உதிர்ந்துவிடுகிறது? கண்களில் நீர் வர நண்பர்களுடன் சிரித்த அந்த டீக்கடை பெஞ்சுகளை யார் தூக்கிக்கொண்டு போனார்கள்? ஒரே ஒரு பெண்ணின், ஒரு வினாடி பார்வைக்காக நாள் முழுக்க நின்றுகொண்டிருந்த பேருந்து நிறுத்தங்களை யார் இடித்தார்கள்? ரயில் நிலையத்தில் குமுறி, குமுறி அழுதுகொண்டே பிரிந்த கல்லூரி நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? யாரோ ஒரு இளம் பெண்ணின் தலையிலிருந்து விழுந்த ரோஜாப்பூவை எடுத்துக் கொடுத்தபோது புன்னகைத்த அல்லது முறைத்த தேவதை இப்போது எத்தனை தேவதைகளுக்கு தாய்? கடைசி வரையிலும் கண்களால் மட்டுமே பேசிவிட்டு காணாமல் போன இளம் பெண்கள், இப்போதும் ஆண்களின் கவிதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியுமா? குரூப் ஸ்டடி என்று குரூப்பாக கெட்டுத் திரிந்த இரவுகள் ஏன் விடிந்தது? தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண் பெயருக்கும் ஒரு சீசன் இருக்கிறது. எனது இளமைக்காலம் காயத்ரிகளால் நிரம்பி வழிந்தது. ஒரு திருமண வீட்டில் நீங்கள் காயத்ரி என்று சத்தமாக அழைத்தால் பத்து காயத்ரிகள் வந்து நிற்பார்கள். 1990களில் நீங்கள் கோயிலுக்குச் சென்றால் வாசலில் பூ விற்கும் காயத்ரியை பார்த்துக் கொண்டே அர்ச்சனைக் கூடையுடன் வரும் காயத்ரியின்மீது மோதி, நே விளக்குடன் வரும் காயத்ரி மேல் விழுந்து கோயிலில் இருக்கும் அத்தனை காயத்ரிகளும் ஏண்டா உனக்கு கண்ணில்லையா? என்பார்கள்.
Book Details
Book Title ஆண்கள் (Aangal)
Author ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (Ji.Aar.Surendharnaadh)
ISBN 9789383067244
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 136
Year 2015
Category Short Stories | சிறுகதைகள், Love | காதல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேவதையைத் தேடிதேவதையைத் தேடி வண்ண கோலப்பொடி கன்னத்தில் அப்பியிருக்க.... போட்டு முடித்தக் கோலத்திற்கு நடுவே பூசணிப்பூவை வைத்துவிட்டு விரல்நுனிளால் தமது இளஞ்சிவப்பு கீமுதட்டைத் திருகியபடி கோலத்தை நோட்டமிடும் அந்த மார்கழி மாத விடியற்காலை தேவதைகள். கொலுவுக்கச் சென்ற வீட்டில் உள்ளங்கையில் சீடையை வைத்துவி..
₹114 ₹120
தீராக் காதல்(திரைப்பட இயக்குனர் திரு. வஸந்த் அவர்களின் மதிப்புரை) ஒரு சிறந்த சிறுகதைக்கு என்னளவில், நான்கு விஷயம் முக்கியம் என்று தோன்றுகிறது. சுரேந்தர்நாத்.. இதில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு எளிதாக வருகிறது ஒன்று நடை .. மற்றொன்று விறுவிறுப்பு...இத்தொகுப்பில் உள்ள கதைகள் காதல் உணர்ச்சிகளை பிரதானமாக..
₹105 ₹110
சிறகுகள் முளைக்கும் வயதில்...சிறகுகள் முளைக்கும் வயதில் தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் நந்தகுமார். நந்தகுமாரின் முன்னாள் காதலியை தேடி’ கண்டுபிடிக்கும் முயற்சியில் கௌதம் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களை சித்தரிக்கும் ‘தேடாதே’ குறுநாவல் . இளைஞர்களின் வாழ்கையில் இளம்பெண்கள் நுழையும்போது ஏ..
₹143 ₹150
காதல் காற்றுகாதல் காற்று காதல் என்பது கடவுள், பொழுதுபோகாமல் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து விளையாடும் ஓரு சுவாரஸ்யமான வினையாட்டு. சோஷியல் நெட்ஒர்க்கிங்¢ காதல், மிஸ்டு கால் காதல், போன்றவை மட்டுமல்லாமல், கடந்த நூற்றாண்டின் பழக்கத்திலிருந்து, தடுக்கி விமுந்தபோது தாங்கிப் பிடித்த காதல், பஸ் ஸ்டாப்பில் ப..
₹95 ₹100