Menu
Your Cart

தமிழர் ஆன்மீகம்

தமிழர் ஆன்மீகம்
-10 %
தமிழர் ஆன்மீகம்
₹158
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப் போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர் ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது. தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்றாலும், தமிழினம் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்த ஆதிக்க முனைப்புகளுக்கு எதிராகப் போராடி தனது அற மரபை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா சிந்தனை மரபுகளிலும் இருப்பதுபோலவே தமிழர் வரலாற்றிலும், பல்வேறு ஆன்மிக நெறிகளுக்கிடையில் போட்டி களும் மோதல்களும் நிகழ்ந்தே இருக்கின்றன. ஆயினும், இவற்றின் ஊடாக தமிழ் மொழியையும், இந்த மண்ணின் நெறியையும் நிலை நிறுத்தும் முயற்சிகளும் தொடர் கின்றன. இன்று, இந்த நவீன காலத்திற்கே உரிய வாய்ப்பு களைப் பயன்படுத்தி, ஒற்றை ஆரியப் பண்பாட்டை தமிழ் மண்ணில் திணிக்க தீவிர முயற்சிகள் நடக்கின்றன. தங்கள் தங்கள் தனி நெறியை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஊடாக ஆரிய ஆன்மிக ஆதிக்கத்தை முறியடிக்கும் ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. சைவம், வைணவம், ஆசீவகம், சமணம், சித்தர் மரபு, இசுலாம், கிறித்துவம் போன்ற பன்மைத்தன்மையில் உள்ள தமிழர் ஆன்மிகம் இந்த அயல் ஆதிக்கத்திற்கு எதிராக, ஒத்த குரலில் பேசுவதை இந்நூலில் உள்ள பல்வேறு கட்டுரைகளும் எடுத்துக்காட்டுகின்றன.
Book Details
Book Title தமிழர் ஆன்மீகம் (Thamizhaga Aanmeegam)
ISBN 978938856058
Publisher பன்மை வெளி (Panmai Veli)
Pages 240
Year 2021
Edition 1
Format Paper Back
Category தமிழர் வரலாறு, தமிழக அரசியல், Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha