Menu
Your Cart

சிவப்புக் கந்தகம் - ஸூஃபி நெறி விளக்க நூல்

சிவப்புக் கந்தகம் - ஸூஃபி நெறி விளக்க நூல்
-5 %
சிவப்புக் கந்தகம் - ஸூஃபி நெறி விளக்க நூல்
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதனை முழு மனிதனாக மாற்றும் ஆன்மிக ரசவாதமான ஸூஃபித்துவத்தைப் பயில்வதற்கான சிறந்த பாடநூல்களுள் ஒன்று இது. ஆன்மிகப் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் சாதகருக்குப் பயனளிக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. ஆன்மிகச் சாதகர்கள் அனைவருக்குமான அகநோக்கு சார்ந்த குறிப்புரைகள் நிறைந்திருப்பதால் சுருக்கமாக இருந்தாலும் பெரிதும் பயனளிப்பதாக உள்ளது. துருவேறி நையும் தனது இரும்பு மனத்தை மாசறு பொன்னாக மாற்ற விழைவோருக்கு, தனது புழுதியை அமிர்தமாக மாற்ற முனைவோருக்கு இந்நூல் ஒரு வழித்துணையாக வரும். *** ‘சிவப்புக் கந்தகம்’ என்னும் சொல் உயர்வான சுயாதீன ஆன்மிக விழிப்படைதலை அல்லது அகதரிசனத்தைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ‘சிவப்புக் கந்தகம்’ என்பது பல்லோரும் தேடுகின்ற அரிதான ஒரு ரசவாதப் பொருளாகும். அது கீழ் மாழையான இரும்பினைச் சொக்கத் தங்கமாக மாற்றுவதாகும். ஒருவர் தனது ஆன்மிக வழிகாட்டியைக் கண்டடைவதையே ‘சிவப்புக் கந்தகத்தைக் கண்டடைதல்’ என்று சொல்கிறார்கள். ‘மறைந்த பொக்கிஷத்தை’ ஒருவர் தன் சுயத்தினுள் கண்டடைவதே ‘சிவப்புக் கந்தகம்’ ஆகும். அதனைக் கண்டடைவது அரிதினும் அரிது என்றாலும் அல்லாஹ்வின் மாபெரும் நேசர்கள் அதனை அபரிமிதமாகக் கண்டடைந்துள்ளனர். கந்தகம் என்பதன் உலகளாவிய அர்த்தம் இறையாணை என்பதாகும். -- முர்ஷிது எஃப்.ஏ.அலீ சனூசீ
Book Details
Book Title சிவப்புக் கந்தகம் - ஸூஃபி நெறி விளக்க நூல் (Sivappu kanthagam)
Author அப்துல்லாஹ் இப்னு அபீபக்ரு அல் ஐதறூஸ்
Translator ரமீஸ் பிலாலி
ISBN 9788196504540
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 114
Year 2024
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Sufism | சூஃபியிசம், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால் ஆனதோர் உலகினைத் திறந்து வைக்கிறது. ரூஸ்பிஹான் என்னும் இஸ்லாமிய ஆன்மிகக் காதலின் மகத்தான ஞானி ஒருவர் வியப்புமிகு துணிச்சலுடன் விளக்கியுள்ள அகப்பார்வைகளின் பதிவுகளே இந்நூல். இந்த இனிய மொழிபெயர்ப்பு வாசகரை பரிபூரண அழகின், தெய்வீகக் காதலின் உலகிற்கு ஏந்திச் செல்கிறது. ..
₹190 ₹200
எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது ‘பாடத்திட்டத்தின்’ ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று...
₹190 ₹200
ஸூஃபி ஞானி ஒருவரின் அகமிய உலகமும் அன்றாட வாழ்வியலும் சந்திக்கும் புள்ளிகள்... ஒளிவீசும் நாட்குறிப்புகளின் வடிவில்...
₹214 ₹225
“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம். “அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஸூஃபி...
₹95 ₹100