Menu
Your Cart

தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்

தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்
-5 %
தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழக வண்னார் வரலாறும் வழக்காறுகளும்

தமிழகத்தின் நிலஉடைமைச் சமூகமானது, தன் ‘குடி ஊழியக்காரர்களாக’, ‘ஊர்க் குடிமகன்’, ‘ஊர் ஏகாலி’, ‘ஊர் வெட்டியான்’ என்ற பெயர்களில் தனக்குப் பணிபுரிய சில சமூகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நவீனத்துவம் அறிமுகமான பின்பும் கூட இன்றும் சில கிராமப்புறங்களில் இது தொடர்கிறது.


இக்குடி ஊழியக்காரர்களில் ஒரு பிரிவினரான வண்ணார்கள் விளிம்புநிலை மக்களாக இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள்.


இவர்கள் வாழ்வியலையும், வழக்காறுகளையும் குறித்த அறிமுக நூலாக இச்சிறுநூல் அமைந்துள்ளது. இலக்கியம், கல்வெட்டு, வரலாறு, வாய்மொழி வழக்காறு, வாய்மொழி சாரா வழக்காறு என்பனவற்றின் துணையுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நம்முடன் வாழும் நம் சக மனிதர்களைக் குறித்த புரிதலை ஏற்படுத்தும் தன்மை இந்நூலுக்குள்ளது.



Book Details
Book Title தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும் (Tamizhaga Vannar Varalarum Vazhakarum)
Author ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian)
ISBN 9788123448116
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 166
Year 2014
Edition 1
Format Paper Back
Category Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவ..
₹276 ₹290
சமயத்தின் முந்தைய வடிவங்களில் ஒன்று மந்திரம். வேட்டைச் சமூகத்தில் தொடங்கி வேளாண் சமூகம் வரை மந்திரச் சடங்குகள் உருப்பெற்று வளர்ந்தன. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த சமூகங்களிலும் இவை முற்றிலும் மறைந்துவிடவில்லை. மனித சமூக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும் குறித்து மானி..
₹250
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது..
₹190 ₹200
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆ..
₹209 ₹220