- Edition: 1
- Year: 2016
- ISBN: 9788177202458
- Page: 180
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழகத்தில் முஸ்லிம்கள்
மனிதகுல வரலாற்றில் தூரதேச வணிகத்தின் மூலமும் இஸ்லாமிய சமத்துவக் கருத்துகள் மூலமாகவும் உலகளாவிய நிலையில் முஸ்லிம்கள் இனக்குழுவாக்கம் பெற்ற வரலாறு தனித்துவமானது.இந்நூல் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாகவும் அவர்களே தனித்தனியான இனக்குழுக்களாகவும் ஆக்கம் பெற்ற போக்குகளை விவாதிக்கிறது.
இதை எஸ்.எம்.கமால் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த முஸ்லிம் வருகையில் தொடங்கி,தமிழக முஸ்லிம்களிடையே துலுக்கர்,சோனகர்,ராவுத்தர்,மரைக்காயர்,லெப்பை,தக்னிகள்,பட்டாணிகள் போன்ற பெயர்கொண்ட சமுதாயங்களாக எவ்வாறு உருக்கொண்டன என்பதுவரை தனித்தனி இயல்களில் விவரிக்கிறார்.அத்துடன் வணிகம்,அரசியல்,பண்பாடு,மொழி போன்றவற்றினூடாகத் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பையும் அவர்கள் உள்ளூர்ப் பண்பாட்டுடன் எவ்வாறு ஒத்திசைவு கொண்டனர் என்பதையும் இலக்கியம்,வரலாறு,செப்பேடுகள் போன்ற ஏராளமான சான்றுகளுடன் எளிய நடையில் விளக்குகிறார்.
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றித் தெரிந்துகொள்ளவும்நவீனகால இனத்துவம் சார்ந்த புரிதலைச் செழுமைப்படுத்தவும் விரும்புபவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
Book Details | |
Book Title | தமிழகத்தில் முஸ்லிம்கள் (Tamizhagathil Muslimgal) |
Author | எஸ்.எம். கமால் (S. M. Kamaal) |
ISBN | 9788177202458 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 180 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை |