Menu
Your Cart

அனுபவங்கள் அறிதல்கள்

அனுபவங்கள் அறிதல்கள்
-5 % Out Of Stock
அனுபவங்கள் அறிதல்கள்
₹76
₹80
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியா கண்ட மாபெரும் தத்துவ ஆன்மீக ஞானியரில் நாராயண குருவுக்கு முக்கியமான இடம் உண்டு. அவரை நேரில் சந்தித்த காந்தி தன் ஆன்மீக ஐயங்களையெல்லாம் அகற்றிய மகான் என்று குறிப்பிட்டார். அவரை சந்தித்த பின் தாகூர் அவரை ஒரு பரமஹம்சர் என்றார். கேரளவரலாற்றில் எல்லா துரையிலும் நாராயண குருவின் மாணவர்களே முக்கியமான தொடக்க அசைவுகளை நிகழ்த்தினர். நாராயண குருவின் ஆன்மீகமான செயல்பாடுகளின் தொடச்சி நடராஜ குரு மூலம் நிகழ்ந்தது. நடராஜ குருவின் மாணவரான நித்ய சைதன்ய யதி மூலம் அது நம் சமகால வாழ்க்கையிலும் ஒளி பரப்பியது. இன்றைய கேரள மனதை மிக அதிகமாக பாதித்த இரு ஆளிமைகள் என்று இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாட்டையும் நித்ய சைதன்ய யதியையும் கேரள எழுத்தாளரான கமலா தாஸ் (இப்போது சுரையா) குறிப்பிட்டுள்ளார். கலை, இலக்கியம், உளவியல், அறிவியல், ஆகிய துறைகளில் முரையான விரிவான படிப்புள்ள நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்திலும் மலையாளத்திலுமாக 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கேரள பதிப்புத்துறையில் புரட்சிகளை உருவாக்கிய நூல்கள் அவர் எழுதியவை. எளிய அறிமுக நூல்கள் முதல் ஆழமான தத்துவ ஆய்வுகள் வரை அவற்றில் அடங்கும். நேரடியான நடையும் நுட்பமான கவித்துவமும் கொண்டவை அவை. அவர் பலதுறைகளைப் பற்றி எழுதிய சிறு கட்டுரைகளும் அவரது சில சுயசரிதைக் குறிப்புகளுமடங்கிய இந்நூல் அவரை அறிந்துகொள்ள மிகவும் உதவியான ஒன்றாகும்.
Book Details
Book Title அனுபவங்கள் அறிதல்கள் (Anubavangal Arithalgal)
Author நித்ய சைதன்ய யதி (Nidhya Saidhanya Yadhi)
Publisher தமிழினி வெளியீடு (Tamilini Publications)
Pages 190
Year 2004

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறிவு – ஞானத்தின் ஆய்வியல் உரை: நித்ய சைதன்ய யதி தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன் ~ அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்? ‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாட..
₹76 ₹80
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில்: யூமா வாசுகி) “இரண்டு வருட காலம் சிறுமி பெலீஷ்யா சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரிய ஞானிகள் மட்டுமே சொல்லக்கூடிய எத்தனையெத்தனையோ மகத்தான வாசகங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தையிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்! குழந்தைகள..
₹114 ₹120