- Edition: 1
- Year: 2009
- Page: 86
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழோசை
சிந்துவெளி எழுத்து
சிந்துவெளி வாசகங்களில் “ மீன் “ குறியீட்டுக்கருகில் வழக்கமாக அதைத் தொடர்ந்து வரும் ‘ நண்டு ‘ குறியீடு நட்சத்திரங்களையும் கோள்களையும் குறிப்பாக வைத்துக்கொள்ளிறோம். ஆகவே, இந்தக் குறியீடு ஆதிக்கால திராவிட மொழிச் சொல்லாகிய கொள் ( கைப்பற்று ) என்பதற்கான குறியீடாக இருந்திருக்கலாம். இந்தக் குறியீடானது தமிழ் மொழியில் கொள் ( கைப்பற்று ) என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த்ந் ‘ கோள் ‘ ( planet) என்பதைக் குறிப்பாகவும் உள்ளது. ஹரப்பா நாகரிக்கால மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் வானவியலைப் பயன்படுத்தி வந்தார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் உள்ளன. அதே நேரத்தில் வேதகால ஆரியர்கள் கோள்களை அறிந்திருந்தார்களா என்பது குறித்தும். இந்த வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த ‘ கோள் ‘ ( planet ) என்ற அர்த்தம் உடைய எதாவது ஒரு பெயர்ச்சொல்லாவது சமஸ்கிருதத்துடன் தொடர்புடைய இந்தோ-ஜரோப்பிய மொழிகளில் இருந்திருக்கிறதா என்பது குறிக்கும் ஆய்வறிஞர்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே சமஸ்கிருத்த்தில் உள்ள கிரஹம் என்ற சொல் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட ஒரு சொல்லாக இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறதே தவிர, சமஸ்கிருதச் சொல்லகிய கிரஹம் என்பதன் கடன் வாங்கப்பட்ட வடிவமாக திராவிடமொழிச் சொல்லாகிய கோள் என்பது இருக்க வாய்ப்பில்லை
Book Details | |
Book Title | சிந்துவெளி எழுத்து (Sinthuveli Ezhuthu) |
Author | அஸ்கோ பர்போலா (Asko Parbolo) |
Publisher | தமிழோசை (Tamizhosai) |
Pages | 86 |
Year | 2009 |
Edition | 1 |
Format | Paper Back |