Menu
Your Cart

தகிப்பின் வாழ்வு

தகிப்பின் வாழ்வு
-5 %
தகிப்பின் வாழ்வு
தொ.பத்தினாதன் (ஆசிரியர்)
Categories: Eezham | ஈழம்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அகதிகளின் வெளியேற்றம், நவீன அடிமை முறை, ஆட்சி மாற்றம், வீடுகள், மதங்கள், சாதிகள், முகாம்கள், பலிகள், ஆயுத உற்பத்தி, புலம்பெயர் சமூகங்களுக்கிடையே நிலவும் தராதரம், சட்டமும் நடைமுறைச் சிக்கல்களும் என சமகால அகதி அரசியல் குறித்த பதின்மூன்று கட்டுரைகளும் முகாம்வாழ் பெண் ஒருவரின் வாக்குமூலமும் மூத்த புலி உறுப்பினர் ஒருவரின் நேர்காணலும் கொண்டது இத்தொகுப்பு. உலகளவில் போர்களைக் குறித்து உள்ளும் புறமுமான ஆய்வுகளும் சாட்சியப் பதிவுகளும் வாக்குமூலங்களும் வெளியாகியிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக இந்துமாக் கடற்கரைகளில் தனித்து விடப்பட்ட மக்களைக் குறித்தும் அவர்களின் துயர் குறித்தும், கால்நூற்றாண்டு காலம் விளிம்புநிலைக்கு உட்படுத்தப்பட்டுக் கவனிப்பாரற்று பத்துக்குப்பத்து கொட்டாய்களில் அடைக்கப்பட்ட வாழ்வு குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் பத்தினாதன். தொகுப்பில் அச்சேற்றப்பட்டுள்ள கட்டுரைகள் அதை வழிமொழிவனவாகவும் வண்ணப்பூச்சுகளற்ற எழுத்துக்களாயும் உள்ளன. விளிம்புநிலை வாழ்வு குறித்த வாசிப்பின் தேவையை வேண்டி நிற்கும் காலத்தில் இவ்வெழுத்துக்கள் வெளியாகின்றன. இது இவரது நான்காவது தொகுப்பு.
Book Details
Book Title தகிப்பின் வாழ்வு (Thagippin Vaazhvu)
Author தொ.பத்தினாதன் (Tho.Pathinathan)
ISBN 9789388631181
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ் உணர்வுக்கும் இது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு அகதிகளாக முகாம்களில் வாழும்  தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவத..
₹124 ₹130
போரில் மடிவதைக் காட்டிலும் கொடிது அதுதரும் துயரத்தோடு வாழ்வது! தமிழகத்தில் வாழ நேர்ந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையும் இதுதான். தன் சிறுவயதில் அகதியாய் வந்திறங்கி நடுத்தர வயதைக் கடந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவருடைய தமிழக வாழ்வின் நேரடி அனுபவம்தான் இந்தத் தன்வரலாறு. ஒருபுறம் பாராமையாகவும் மற..
₹266 ₹280