- Edition: 1
- Year: 2011
- Page: 56
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தாலம் வெளியீடு
தனிமையில் குலுங்கும் வீடு
கவிதைகள் மிக எளிமையாக வந்து கொண்டிருக்கும் காலம் இது அவரவர்கள் அவரவர்களுக்குத் தக்கபடி அந்த களத்தில் நின்று கொண்டு தங்களுக்கான சாகசங்களை மிகலாவகமாக செய்து கொண்டிருக்கிறார்கள் பூச்சிகளோடும், பிராணிகளோடும் மணம் மாறாத கிராமங்களோடும் விசித்திரமான மனிதர்களோடும் உலாவிக் கொண்டிருக்கும் கிருஷ்ண கோபாலின் உலகம் ஒரு மர்மம் நிறைந்த உலகம் தனக்குள்ளிருக்கும் அந்த பல்லிகள் தனது கவிதைக்குள் தாவிவாலைச் சுருட்டியபடி கெளளியடித்து தன் உணர்வுகளை பிரதிபலித்துக் கொள்கையில் நம் ஆதிமனம் அதன்மொழியை உணர்ந்து கொண்டு அதனோடு சகிம்ஞை மொழியில் உரையாடிக் கொள்கிறது இறுதியில் கவிதையில் வந்த பல்லி அறுத்துப் போட்ட வால் மட்டும் வாசக மனதில் துடித்துக் கொண்டிருக்கையில் எல்லைச்சாமிகளாக உலாவிக் கொண்டிருக்கும் ஐயா வைகுண்டசாமியும் பூதமும், மலையடிவாரத்து முருகனும் பூனைகள் வெளவால்களாகத் தொங்கும் மர்மம் நிறைந்த மரமும் தன்னைக் குற்றப்படுத்தாத நாயும் நம்மை ஆதி குடியை நோக்கி அழைத்துச் செல்கிறது எந்த கோட்பாட்டையும் வலித்து திணிக்காத இந்த தொகுப்பில் கோட்பாட்டாளர்களுக்கான பல வாசல்களும் திறந்து கிடக்கின்றன.
அன்பு முத்தங்களுடன்
என்.டிராஜ்குமார்
நாகர்கோவில்
Book Details | |
Book Title | தனிமையில் குலுங்கும் வீடு (Thanimaiyil Kulungum Veedu) |
Author | கிருஷ்ண கோபால் (Kirushna Kopaal) |
Publisher | தாலம் வெளியீடு (Thalam Veliyedu) |
Pages | 56 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |