Menu
Your Cart

தமிழ் நெடுஞ்சாலை

தமிழ் நெடுஞ்சாலை
-5 %
தமிழ் நெடுஞ்சாலை
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போதும் இனிமையானவையே. தமிழில் படித்து தமிழைப் பிடித்து உயர்நிலைக்குச் சென்ற ஓர் உயர் அதிகாரி, இந்தத் தமிழ் நெடுஞ்சாலை முழுதும் தன் அனுபவங்களைப் பகிர்ந்தபடி பயணிக்கிறார். ஒவ்வோர் அத்தியாயமும் ஒவ்வொரு மைல் கல்லாக பல செய்திகளைத் தருகின்றன. தமிழ் வழியில் படித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி ஒடிசா மாநில அரசின் உயர் பொறுப்புகளிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் பொறுப்பிலும் இருந்து தம் கடமையைச் சரிவர செய்து பலரின் பாராட்டுப் பெற்றவரின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. ஆனந்த விகடனில் வெளிவந்த தமிழ் நெடுஞ்சாலைத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தேர்தலில் ஒவ்வொரு குடிமகனின் வாக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, ‘கேரள மாநிலம் காக்கயம் அணைப்பகுதியில் ஒரே ஒருவரின் வாக்கைப் பதிவு செய்வதற்காக, அடர்ந்த காட்டுக்குள் ஆறு ஊழியர்கள் மின்னணு இயந்திரத்தைக் கொண்டு சென்று வாக்கைப் பதிவு செய்து வந்தனர்' என்ற செய்தி நமக்குக் காட்டுகிறது. இதுபோல பல சுவையான சம்பவங்களைத் தன் அனுபவங்களோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன். தகவல்கள் பல அறிய இனி தமிழ் நெடுஞ்சாலையில் பயணிப்போம் வாருங்கள்!
Book Details
Book Title தமிழ் நெடுஞ்சாலை (Thamizh Nedunchalai)
Author ஆர்.பாலகிருஷ்ணன் (R. Balakrishnan)
ISBN 9788195164714
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு,சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நில..
₹190 ₹200
காமம்... ஒரு தேயிலைத் தோட்டத்து கங்காணியைப் போல என்னைக் காவு கொள்கிறது. பேரணி முடிந்த நள்ளிரவின் சீரணி அரங்கம் போல நான் சிதைந்து கிடக்கிறேன். இந்தியத் துணைத் தேர்தல் ஆணையராக பணிபுரிந்த ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப- வின் பணிமொழி (அதாவது பணியில் இருக்கும் போது பேசும் மொழி - -ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் ..
₹257 ₹270
இருட்டு வணிகர்கள் ஏதேனும் சொல்லட்டும் வெளியே உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. நிறையும் குறையும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சியளிக்கிறது...
₹152 ₹160