- Edition: 3
- Year: 2015
- ISBN: 9789382648352
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
தண்ணீர் - அசோகமித்திரன்:
அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற, அமர சிருஷ்டிகள் என்பேன். இந்த இரண்டு நாவல்களையும்போல், இப்போது அவரால்கூட எழுதமுடியாது என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவரை உலக இலக்கியத்தில் குறிப்பாக ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்தான் இதுபோன்ற படைப்புகள் தென்படுகின்றன. ரஷ்ய இலக்கியத்தில் இதுபோல் கதை சொல்பவர்கள் குப்ரினும், செகாவும்.
அசோகமித்திரன் போல் இவ்வளவு இறுக்கமாக உணர்ச்சி களையும் சம்பவங்களையும் பின்னிக் கதை எழுதும் படைப்பாளி, வேறு எந்த இந்திய மொழியிலாவது இருக்கிறாரா என்று தெரியவில்லை. இருக்கச் சாத்தியமில்லை என்றே என் உள்ளுணர்வு கூறுகிறது.
இந்த பாஷையும், இந்தத் தேசமும் பெருமை கொள்ளத்தக்க இலக்கிய கர்த்தா அசோகமித்திரன்.
Book Details | |
Book Title | தண்ணீர் (நற்றிணை) (Thanneer) |
Author | அசோகமித்திரன் (Ashokamitran) |
ISBN | 9789382648352 |
Publisher | நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications) |
Pages | 144 |
Year | 2015 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ் |