Menu
Your Cart

தேவதைக் கதைகள்

தேவதைக் கதைகள்
-5 % Available
தேவதைக் கதைகள்
கே.முரளிதரன் (ஆசிரியர்)
₹100
₹105
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தேவதைக் கதைகள்

‘ஒரு ஊரில்...' என்று பாட்டி சொன்ன கதை முதல் இன்று வரை கதை சொல்லல் இனிது, கதை கேட்டல் அதனினும் இனிது. கதை கேட்கும் ஆர்வம் ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிலாவைக் காட்டி அம்மாக்கள் சோறூட்டிட, பாட்டிகள் கதை சொல்லி உறங்கவைத்த பழக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது. இன்று தொலைக்காட்சிகளில் டோரா புஜ்ஜிகள் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதைகளால் சிறுவர்களுக்கு சந்தோஷத்தையும் அதன் மூலம் அவர்கள் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும் விதைக்க முடியும். கதைகள் மன அழுத்தத்தைக் குறைப்பவை, மகிழ்ச்சியை, புத்துணர்வைக் கொடுக்கக் கூடியவை. கதை கேட்டு வளர்ந்த சமூகம் மிகவும் விழிப்பு உணர்வு பெற்றதாக இருந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல கதைகளால் களிக்கும் பெரியோர்களும் உண்டு... கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன. இன்றுவரை கதைகளில் ஆர்வமில்லாதவர்கள் இருக்கவே முடியாது. புராணக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக் கதைகள், சாகசக் கதைகள், புனைவுக் கதைகள்... என எல்லா விதமான கதைகளை எல்லோரும் கேட்டிருப்போம். அந்த வரிசையில் சுட்டி விகடனில் குட்டீஸ்களுக்காக வெளிவந்த தேவதைக் கதைகளும் அதனுடன் புதிய கதைகளும் சேர்ந்து இப்போது நூலாகியிருக்கிறது. குழந்தைகள் தேவதை போன்றவர்கள், அந்த தேவதைகளை உற்சாகப்படுத்தும், உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும், இந்த தேவதைக் கதைகள்!


Book Details
Book Title தேவதைக் கதைகள் (thevathai kathaikal)
Author கே.முரளிதரன் (K.Muralitharan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 104
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும்போதெல்லாம் கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் உரத்துக் கேட்கிறது. குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காத, கட்டாந்தரையான ஒரு சிறிய தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது? இந்தச்..
₹181 ₹190
“நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்” - புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என். சட்டநாதன். உயர் சாதியினர்தான் படித்தவர்கள் என்ற சூழல் நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ..
₹323 ₹340