-5 %
உஷாரய்யா உஷாரு
பால் சுயம்பு (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2020
- ISBN: 978-9389595062
- Page: 240
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தினத்தந்தி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கையில் ஏமாறாமல் இருக்க படிக்க வேண்டிய புத்தகம்.
இந்த உலகத்தில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை. நீங்கள் வேலைக்கும், உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ தினமும் கிளம்பிச்செல்வார்கள். உங்கள் மனைவி தனியாக வீட்டில் இருக்கலாம். அவர்கள் அனைவரையும் வீட்டில், ரோட்டில், பயணங்களில், பொது இடங்களில் ஏமாற்ற யாரோ ஒரு சிலர் குறி வைத்து காத்திருக்கிறார்கள்.
பணத்துக்காக காதலிப்பவர்கள், பெண்களை ஏமாற்றி ஆசைவலையில் சிக்கவைப்பவர்கள், திருமணம் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள், முதலிரவை நடத்திவிட்டு அடுத்த இரவே நகைகளோடு மாயமாகி விடுகிறவர்கள், தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை - கொள்ளை செய்பவர்கள், பள்ளிகளில் இருந்து குழந்தைகளை கடத்துகிறவர்கள்.. இப்படி நம்மை சுற்றி சமூக விரோதிகள் பலர் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்ற திடுக்கிடவைக்கும் உண்மைகளை உயர்போலீஸ் அதிகாரிகள், செக்ஸாலஜிஸ்டுகள், கல்லூரி முதல்வர்கள், திருமண தகவல்மையம் நடத்துபவர்கள், மனோதத்துவ நிபுணர்கள், வக்கீல்கள், தனியார் துப்புதுலக்கும் மையத்தினர், குடும்பநல நீதிமன்றங்கள், ஜெயில்கள் உள்பட பலதுறைகளில் இருந்து பல ஆண்டுகளாக சேகரித்து தினத்தந்தி மக்களுக்கு சேவை செய்யும் உணர்வோடு உஷாரய்யா உஷாருவை வெளியிட்டு வருகிறது.
அதில் மிக முக்கியமான 96 உண்மை சம்பவங்களை மட்டும் புத்தகமாக்கியுள்ளோம். இதை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பால் சுயம்பு தொகுத்துள்ளார். நீங்களும், உங்கள் குழந்தைகளும், குடும்பத்தாரும் எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் ஏமாறாமல் இருக்க படிக்க வேண்டிய புத்தகம்!
Book Details | |
Book Title | உஷாரய்யா உஷாரு (Ushaaraiya usaru) |
Author | பால் சுயம்பு |
ISBN | 978-9389595062 |
Publisher | தினத்தந்தி (Thinathanthi) |
Pages | 240 |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |