Menu
Your Cart

திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்

திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்
-5 %
திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டில் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் சுவாரஸ்யமான சிறுகதைகள், சரி, சற்றே பெரிய சிறுகதைகள் பின்னப்பட்டால் என்ற ஆசையின் விளைவே இந்தத் 'திரைபொரு கடல்சூழ்' மெட்ராஸ் என்னும் தொகுப்பு. சதா ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் வங்கக்கடல் சூழ்ந்த மெட்ராஸ் எல்லா கதைகளுக்கும் பின்புலமாய் அமைந்திருப்பதும் ஒரு வகையில் சாதாரண மக்களோடு பின்னிப்பிணைந்து இருக்கும் வாழ்க்கையெனும் சாகரத்தின் அனுபவக் குறியீடுதானே! இன்று நாம் காரிலோ பஸ்ஸிலோ கடக்கும்போது திரும்பிக்கூடப் பாராத ஜார்ஜ் கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் தீவுத்திடலும் அந்தக் காலகட்டத்தில் எத்தனையோ சண்டைகளைப் பார்த்திருக்கின்றன. கையில் துப்பாக்கியுடனும் கண்களில் வெறியுடனும் படை வீரர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்ல ஓடியிருக்கும் வீதிகள் இவை. இந்த நிலத்திடலில் வீழ்ந்த மனித உடல்களும் சிதறின ரத்தமும் சதைத்துளிகளும் சீந்துவாரின்றி சிதறிக் கிடந்த ஒற்றைச் செருப்புக்களும் அன்றைய வன்முறையைப் பறைசாற்றுகின்றன. இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் வன்முறை இல்லையென்றாலும் பேச்சினாலும் எழுத்தாலும் திரைக் காட்சிகளாலும் சக மனிதனைத் தாக்கும் உணர்வு மீதான வன்முறை இருக்கிறதா இல்லையா என்பதை நாம்தான் மனதைத் தொட்டுப் பார்த்துச் சொல்ல வேண்டும் என்னும் சிந்தனையுடன்...
Book Details
Book Title திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ் (Thiraiporu kadal soozh Madras)
Author ஜெயராமன் ரகுநாதன்
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அடையாறு என்பது எனக்கு மீண்டும் மீண்டும் கனவுகளில் வரும் முகங்களும் அவை வீசி எறிந்துவிட்டுப்போகும் நினைவுகளுமே. எல்லா விதங்களிலும் என்னை ஆட்கொண்ட அந்த நினைவுகளிலிருந்து நான் மீளப்போவது இல்லை. மீளவும் விருப்பம் இல்லை. உங்களின் ஊரையும் இளமைக் காலப் பள்ளி அனுபவங்களையும் ஆதர்ச மனிதர்களையும் மறக்கவே முடி..
₹162 ₹170
டாக்டர் என்பவர் நம் உடல் உபாதையின் மூலகாரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, சரியான மருந்து கொடுத்து சொஸ்தமாக்கிவிட மாட்டாரா, அதற்கு சல்லிசாகக் காசு வாங்கிப் போதும் என்று சொல்லிவிட மாட்டாரா, இல்லை காசு செலவழியட்டும், ஆனால் குணப்படுத்திவிட்டால் போதும் என்ற ஏக்கம் விரவிக்கிடப்பதே கண்கூடு. என் குடும்பத்தி..
₹266 ₹280
அறுபது வருஷங்களைக் கடந்த வாழ்க்கை ஒரு பெரிய மரமாகத்தான் நம் முன்னே விரிகிறது. அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் நிகழ்ச்சிகளும் அந்த மரத்தின் நிழலில் இளைப்பாறிக்கொண்டிருக்கின்றன. அவற்றை அசைபோடும் தருணங்களில் நிறைவேறாத ஆசைகளும் எதிர்பாராத முடிவுகளும் முடிவில்லாச் சம்பவங்களும் கற்பனைகளாக உருவெடுத்து மன..
₹190 ₹200