
-5 %
திருமறையின் தோற்றுவாய்
₹152
₹160
- Year: 2008
- Page: 344
- Language: தமிழ்
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருக்குர் ஆனின் அழைப்பு நேரடியானது. மனிதன் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் முறையில் மனிதனுடைய சிந்தனை, அன்றாட வாழ்க்கை, அனுபவங்கள் ஆகியவற்றை அவன் பயன்படுத்தும் அளவில் அந்த அழைப்பு அமைந்துள்ளது. வியப்பும் குழப்பமும் உண்டாக்குகின்ற வினாக்களை எழுப்பித் திகைக்க வைத்தல் திருக்குர்ஆனின் தோரணையன்று. புரியாத புதிர்கள் அதில் இடம்பெறவில்லை. இதைத் திருக்குர்ஆனே, "இக்குர்ஆனைக் கொண்டு நல்லுபதேசம் செய்வீராக" எனக் கூறுகின்றது. இக்கட்டளை நாயகத் தோழர்கள் காலத்தில் பின்பற்றிச் செயலாற்றப்பட்டது. அதற்குப் பிறகு கிரேக்கக் கருத்துக்கள் வந்து புகுந்துவிட்டன. அவற்றின் உதவியால் முஸ்லிம்கள் குர்ஆனை விளக்க ஆரம்பித்தார்கள். அதனால் எளிய முறையில் அமைந்த பூர்வ விளக்கங்கள் மறையலாயின. மௌலானா அபுல்கலாம் ஆசாத் இக்குழப்ப நிலையை நீக்கி தெளிவுபடுத்த விரும்பினார். அதன் விளைவே அவர் உருது மொழியில் எழுதிய "தர்ஜுமானுல் குர்ஆன்' எனும் அழகிய இனிய தெளிவான விரிவுரை மொழி பெயர்ப்பு நூலாகும். அதில் குர்ஆனைக் கொண்டே குர்ஆனை விளக்கும் அறிய முறையை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் துவக்கத்தில் தோற்றுவாய் (ஸூரத்துல் ஃபாத்திஹா) அமைந்துள்ளது. மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அரிய நூல்களில் மவுலானாவின் இந்நூலும் ஒன்று. இவ்விரிவுரை முஸ்லிம்களின் அறிவுத் துறையில் புதிய விழிப்புணர்ச்சியை உண்டாக்குகிறது.
Book Details | |
Book Title | திருமறையின் தோற்றுவாய் (Thirumaraiyin Thotruvaai) |
Author | மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (Mowlaanaa Apul Kalaam Aasaadh) |
Translator | ஸையித் இப்ராஹீம் (Saiyidh Ipraaheem) |
Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் (Universal Publishing) |
Pages | 344 |
Year | 2008 |