Menu
Your Cart

தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்

தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
-5 %
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
அ.சி.விஜிதரன் (ஆசிரியர்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஆப்பிரிக்கவின் "சே குவேரா" என்றழைக்கப்பட்டவர் ”தாமஸ் சங்காரா” ஆப்பிரிக்காவில் புரட்சிகளை தாங்கிய ஒரு நாடு “பர்கினா ஃபாசோ” 1987 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் திகதி ”அவர்களுக்கு வேண்டியது நான்தான்” கடைசி வார்த்தைகளை உதிர்த்த 37 வயது இளம் ஜனாதிபதி, மற்றவர்களை பதுங்கி இருக்க சொல்லிவிட்டு நீட்டப்பட்ட இயந்திர துப்பாக்கிகளுக்கு முன் நடந்து செல்ல… நிமிடங்கள் தாமதிக்காமல் அவை அவரை சல்லடையாக்கி ஓய்ந்தன. யாருக்கும் தெரியாமல், எங்கு என்று சொல்லாமல் இரவோடு இரவாக அவர் புதைக்கப்படுகிறார். புதைத்தவர்கள் அத்தோடு அவர் கதை முடிந்தது என்று நினைத்தார்கள்… ஆனால் வரலாறு அவன், அவன் அப்பன் வீட்டு சொத்து அல்ல.. நினைத்த மாதிரி நடப்பதற்கு… அதுவரை அப்படி ஒரு தலைவனை, வழிகாட்டியை, புரட்சியாளனை அந்த மக்கள் பார்த்தது இல்லை. மக்களுக்காகவே தினம் தினம் உழைத்த அந்தத் தலைவனை அத்தனை சுலபமாக மக்கள் மறந்துவிடுவார்களா என்ன? அவர் புதைக்கப்பட்ட இடம் இரண்டே நாட்களில் மக்களால் கண்டுபிடிக்கப்படுகிறது.. அவனுக்கு சமாதி எழுப்பப்படுகிறது… அந்த சமாதியில் “ ஏழைகளின் ஜனாதிபதி நீடூழி வாழ்க” “பொறாமை பிடித்த அதிகாரவெறி கொண்ட துரோகிகளே உம்மைக் கொன்றனர்” “உம்மை மறப்பது சாத்தியமா” “மாவீரனுக்கு மரணமில்லை” “உங்களை கொன்றவர்கள் பழிதீர்க்கப்படுவார்கள்” என எழுதிவைத்தனர்.
Book Details
Book Title தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும் (Thomas Shankara Vazhvum Chinthanaiyum)
Author அ.சி.விஜிதரன் (A.Si.Vijidharan)
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Published On Jun 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Racism | இனவாதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha