- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
துடியான சாமிகள்
குமரி மாவட்டத்தில் வழங்கும் கதைப்பாடல்களைத் தொகுத்து, அக்கதைப்பாடல்கள் நிகழ்த்தப்படும் சூழல்களை, நிகழ்த்தும் முறைகளை உற்றுக் கவனித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்நூல். இது தமிழியல் ஆய்வுப் புலங்களில், நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் வெளியான கதைப்பாடல் ஆய்வு நூலாகத் திகழ்கிறது. அதே வேளையில் இன்றைய இந்துத்துவச் சூழலில் இந்நூல் வெறும் கல்விப்புல ஆய்வுநூல் மட்டுமல்ல, நமது மக்கள் பண்பாட்டின் உள்ளாற்றலை மிகச் சிறந்த முறையில் மதிப்பிடும் நூலாகவும் திகழ்கிறது.
இந்நூலின் ஆசிரியர் நா.இராமச்சந்திரன் ஒருசேர, தமிழக நாட்டார் வழக்காற்றியல் புலத்தின் விடிவெள்ளிகளான நா.வானமாமலைக்கும் தே.லூர்துக்கும் மாணவராக அமைந்தவர். நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் மார்க்சிய அணுகுமுறையைப் படைப்பாற்றலுடன் கையாளுபவர். இடதுசாரி இயக்கக் கல்வியாளராகவும் செயல்பாட்டாளராகவும் விளங்குபவர்.
Book Details | |
Book Title | துடியான சாமிகள் (Thudiyanasamigal) |
Author | முனைவர் நா.இராமச்சந்திரன் (Munaivar Naa.Iraamachchandhiran) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Format | Paper Back |