Menu
Your Cart

திருநெல்வேலி - (நீர், நிலம், மனிதர்கள்)

திருநெல்வேலி - (நீர், நிலம், மனிதர்கள்)
-5 %
திருநெல்வேலி - (நீர், நிலம், மனிதர்கள்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கரிசல்மண் பூமியான கோவில்பட்டியில் இருந்து தேவாலயங்கள் நிரம்பிய பாளையஙகோட்டை வந்து சேர்ந்தபோது அது புதியதொரு அனுபவமாக இருந்தது. இரவில் பேருந்தில் வரும்போது கிறிஸ்துராஜா பள்ளி வளாக மெர்க்குரி ஒளி வெள்ளத்தில் இயேசுநாதர் கைநீட்டி அழைக்கும் சிலை என்னவோ சொல்வதுபோல இருக்கும். ரெயினிஸ் ஐயர் தெரு நாவலை வாசித்திருந்த பின்னணியில் அந்தத் தெருவைக் கடக்கும் போது மிகப்பெரிய வரலாற்றைக் கடக்கும் உணர்வு ஏற்பட்டது. தெற்குக் கடைவீதியின் தேநீரை ஒரு கையிலும் சிகரெட்டை மறுகையிலும் வைத்தபடி, மிசனரி கால்டுவெல் பற்றி தொ.ப. பேசுவதை பிரமிப்புடன் கேட்ட நாளை மறக்கவே முடியாது. மழைபெய்த இரவின் நாளில் டேவிட் பாக்கியமுத்து - சரோஜினி பாக்கியமுத்து தம்பதியர் கிளாரிந்தாவைப் பற்றி சொன்ன கதைகள் ஏராளம் ஏராளம். பாளையங்கோட்டை கல்லூரி மாணவன் லூர்துநாதன் சிலையின் வரலாறு பலரும் அறியாத ஒன்றே. கொக்கிரகுளம் ஆற்றின் எதிரே உள்ள தைப்பூச மண்டபத்தின் சிறப்பைப் பற்றி தொ.மு.சி.ரகுநாதன் சொல்லித்தான் தெரியும். கிருஷ்ணபுரம் கோவில் சிற்பங்களின் மகத்துவம் பற்றி ஓவியர் இசக்கி அண்ணாச்சி மணிக்கணக்கில் பேசுவதை வாய்பிளந்து கேட்ட அனுபவம் உண்டு. நெல்லையின் ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு வரலாறு இருப்பதை அனுபவத்தில் அறிந்து கொள்ள முடிந்தது.
Book Details
Book Title திருநெல்வேலி - (நீர், நிலம், மனிதர்கள்) (tirunelveli-neer-nilam-manithargal)
Author இரா.நாறும்பூநாதன் (Iraa.Naarumpoonaadhan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 270
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, தமிழகம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலை உதிர்வதைப் போல்;குழந்தைகளையும் சிறுமிகளையும், பெண்களையும். ஆச்சிகளையும் கதா உலக்த்தில் பார்த்து ரொம்ப நாள் ஆனது மாதிரி இருக்கிறது. நவீன வாழ்வின் நுட்பம் அல்லது நுட்பமின்மையால் மொழி இரும்புக் கிராதிகளைப் போல கிறீச்சிட்டு மறிக்கிறது.நமக்குக் காற்றைப் போல், இசையைப் போல் மொழி வேண்டும். குழந்தைகள் ஓட..
₹143 ₹150
எட்டயபுரத்திற்கு செல்லும்போதெல்லாம், பாரதி மணி மண்டபம் பார்த்து வருபவர்கள் அநேகம். ஆனால், அவர்களில் பலருக்கு பிதப்புரம் தெரியாது. அங்கே பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் கட்ட முயற்சித்து பாதியில் சிதைந்த நிலையில் இருக்கும் நூற்பாலை கட்டிடம் பற்றி எழுத வேண்டும் என தோணியது. எட்டயபுரத்தில் இருந்து சுமார..
₹114 ₹120