Menu
Your Cart

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

டாப் 200 வரலாற்று மனிதர்கள்
-5 %
டாப் 200 வரலாற்று மனிதர்கள்
பூ.கொ.சரவணன் (ஆசிரியர்)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்று பிரமிக்க வைத்தவர்கள் உருவானது எப்படி? வெற்றி சும்மா இருந்தால் வருமா? வெற்றியாளர்களின் மறுபக்கம் என்ன? வரலாற்றில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய சுவாரசியங்கள் நிறைந்த தகவல்களைத் தருகிறது இந்த நூல். வெற்றி பெறத்துடிக்கும் உங்களுக்குத்தான் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் போற்றப்படும் ஒருவர் பெர்னாட்ஷா. அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்குத் தகவல் சொன்னார்கள், “உங்களுக்கு நோபல் பரிசு ஷா” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்குக் கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை; “அது போன வருடம் எழுதியது, உயிருக்குத் தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்குக் கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ளப் போகவே இல்லை. இதுபோன்ற வரலாற்று மேதைகளின் மகத்துவம் நிறைந்த வாழ்வியலைப் பற்றி நிறைய தகவல்களை அள்ளித் தந்துள்ளார் நூலாசிரியர். பெர்னாட்ஷா சொன்னது போல.. வாழ்க்கை உங்களைக் கண்டடைவது இல்லை; உங்களைப் படைத்துக்கொள்வது என்பதற்கேற்ப உங்களை நீங்கள் படைத்துக் கொள்ள நீங்கள் படிக்க வேண்டியது இந்த வரலாற்று நாயகர்களை பற்றித்தான் என்பது இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்து கொள்வீர்கள். வாசியுங்கள்.. உங்களுக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்திருக்கின்றன.
Book Details
Book Title டாப் 200 வரலாற்று மனிதர்கள் (Top 200 Varalatru Manithargal)
Author பூ.கொ.சரவணன் (Pu.Ko.Saravanan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அம்பேத்கர் குறித்து பல பதிவுகள் வெளிவந்திருந்தாலும், மூன்று முக்கியமான காரணங்களுக்காக இந்நூல் அவற்றிலிருந்து தனித்து நிற்கிறது. அம்பேத்கரின் வாழ்க்கை, சிந்தனைகள் இரண்டையும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் இந்நூல் அறிமுகம் செய்கிறது. ஒரு தலித் தலைவராக மட்டுமின்றி அம்பேத்கரின் பன்முக ஆளுமை மிக விரிவாக இத..
₹285 ₹300
வெளிநாட்டினருக்குத் தீண்டாமை நிலவி வருவது ஐயத்துக்கு இடமின்றித் தெரியும். ஆனால், தீண்டாமை நிலவி வரும் பகுதிக்கு அருகில் அவர்கள் வாழாததால், நடைமுறையில் அது எத்தகைய ஒடுக்குமுறைமிக்கதாகத் திகழ்கிறது என அவர்களால் உணர முடியவில்லை. பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் வாழும் கிராமத்தின் விளிம்புப் பகுதியில் எ..
₹67 ₹70