
-5 %
Out Of Stock
பௌத்தத்தை வீழ்த்தி புஷ்யமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகரானதொரு கொண்டாட்ட மனநிலையை பார்ப்பன மேலாதிக்கவாதிகள் பாரதிய ஜனதாவின் இப்போதைய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். முகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சிகள், பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்தவம், குடியாட்சி முறை, மார்க்சீயம், பெரியாரியம் அம்பேத்கரியம் ஆகியவற்றின் குறுக்கீடுகளால் சாதியத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு மாற்றங்களைக்கூட அடித்து நிரவி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுபோக அவர்கள் அஞ்சத்தக்க வேகத்தில் பணியாற்றி வருகிறார்கள். பார்ப்பன மேலாதிக்கவாதிகள் அரசியல்ரீதியாக தமக்குக் கிடைத்துள்ள வெற்றியை பண்பாட்டு மேலாதிக்க வெற்றியாக மாற்றிக் கொள்வதற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றிபெறுமானால் இந்தியச் சமூகம் கடந்தகாலத்தின் இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்கிற அபாயத்தை முன்னுணரும் கூருணர்ச்சி கொண்ட அரசியல் விலங்குகளாக எழுத்தாளர்கள் மாற வேண்டியுள்ளது.
Book Details | |
Book Title | சாதிகளின் உடலரசியல் (Saathigalin Udalarasiyal) |
Author | உதயசங்கர் (Udhayasankar) |
Publisher | நூல் வனம் (Nool Vanam) |
Pages | 96 |
Year | 2015 |