- Edition: 01
- Year: 2018
- ISBN: 9788177202564
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அடையாளம் பதிப்பகம்
இஸ்லாமிய வெறுப்புத் தொழில்( வலதுசாரிகள் முஸ்லிம் அச்சத்தைத் தயாரிப்பது எப்படி ) - நாதன் லீன் :
அச்சம் என்பது நல்ல விலைக்குப் போகும் ஒரு சரக்கு; மதத் தலைவர்கள், பண்டிதர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர், இணையகுடிமக்கள், கூவி விற்கும் அறிவுஜீவிகள் கொண்ட வலதுசாரி ஊழியக்காரர்கள் நிரம்பிய இஸ்லாமிய வெறுப்புத் தொழில்துறைக்கு அது நன்றாகவே தெரியும். அவர்கள் முஸ்லிம்கள்தான் விரோதி என்று உடனிருக்கும் மக்களை நம்ப வைப்பதற்காகப் பல ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் செல்வத்திற்காகவும் புகழுக்காகவும் 9/11 ஆவிகளைத் தோண்டி எடுத்து, வெகுமக்களின் கண்களுக்கு முன்னே ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் திட்டம் இப்போது நன்றாக வேலை செய்கிறது.
அமெரிக்கா, அய்ரோப்பா என உலகெங்கும் அடித்துச் செல்லும் இஸ்லாமிய வெறுப்பின் பேரலை இயற்கையாக நிகழும் ஒன்றல்ல. இது இஸ்லாமிய வெறுப்பு ஊழியர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த வடிவமைப்பு.
அண்மைக் காலங்களில் முஸ்லிம்கள் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைந்திருக்கின்றன. ஆனாலும் முஸ்லிம் எதிர்ப்பு முற்சாய்வுகள் புதிய உச்சங்களை அடைந்திருக்கின்றன. இஸ்லாமிய வெறுப்புத் தொழிலகங்கள் தயாரித்திருக்கும் அச்சத்தின் பிடி சில மக்கள் கூட்டங்கள் மீது அவ்வளவு கடுமையாக இருப்பதால், நினைத்துப் பார்க்கவும் முடியாததைச் செய்வதற்கு அவர்களைத் தூண்டுகிறது. ஆற்றல்மிக்க இந்த நூல் அரக்கர்களைத் தயாரிக்கும் இருண்ட உலகை ஆராய்கிறது.
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் நன்கு திட்டமிட்ட அச்ச வணிகர்களின் குடிசைத் தொழிலை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும் அவர்களின் பயமூட்டும் தந்திரங்கள், நோக்கங்களையும் வெறுப்பைத் தூண்டும் ஆர்வங்களையும் அம்பலப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாதன் லீன் இந்த ஆபத்தான, செல்வாக்குமிக்க வலைப்பின்னல் மீது கண்டிக்கும் வெளிச்சத்தை வீசுகிறார்.
‘யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் இஸ்லாமிகா’, ‘யூரேபியா’, ‘லண்டனிஸ்தான்’ போன்ற இடங்களில் ‘பதுங்கு ஜிஹாத்’, ‘ஊர்ந்துவரும் ஷரீஆ’, ‘இஸ்லாமிய பாசிசம்’, ‘பயங்கரவாத குழந்தைகள்’ போன்றவை அதிகரித்து கொண்டிருக்கும் போது யாருக்குதான் பயமாக இருக்காது?
Book Details | |
Book Title | இஸ்லாமிய வெறுப்புத் தொழில் (islamiya-veruppu-thozhil) |
Author | நாதன் லீன் (Naadhan Leen) |
Translator | உமா பாலு (Uma Balu) |
ISBN | 978177202564 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 0 |
Published On | Apr 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Paper Back |