Menu
Your Cart

உன் தோலுக்கு அடியில் நீ | You Beneath Your Skin

உன் தோலுக்கு அடியில் நீ | You Beneath Your Skin
-5 %
உன் தோலுக்கு அடியில் நீ | You Beneath Your Skin
₹409
₹430
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பொய். பேராசை. குடும்பம்* இது ஓர் இருண்ட, புகைமூட்டமான டெல்லி குளிர்காலம். இந்திய-அமெரிக்க ஒற்றைத் தாயான அஞ்சலி மோர்கன் தனது மனவளர்ச்சி குறைந்த பதின்மவயது மகனைப் பராமரிப்பதுடன், ஒரு மனநல மருத்துவராகத் தன்னுடைய பணியையும் மேற்கொள்கிறார். அவர் இலட்சிய ஆர்வமிக்கக் காவல்துறை ஆணையாளர் யதீன் பட்டுடன் ஒரு நீண்டகால உறவிலும் இருக்கிறார் - அது இருவரின் வாழ்க்கையையும் அழிக்கக்கூடிய தவிர்க்க முடியாத ஓர் ஈர்ப்பு. இதேவேளை, யதீனின் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்துகொண்டிருக்கிறது: அழகும் கவர்ச்சியும் மிக்க அவருடைய மகன் வெளிப்பார்வைக்கு அவனுடைய தோற்றத்தைப் போன்றிருக்கவில்லை. யதீனின் மனைவியோ தன் கணவன், மகன் இருவர் மீதும் எவ்வித அக்கறையும் இல்லாமல் இக்கட்டில் இருக்கிறாள். ஆனால் யதீன் மிகவும் ஆழமான புரிந்துணர்வுள்ள தம் சகோதரி உள்பட யாருடைய பேச்சையும் கேட்க மறுக்கிறார். நகரம் முழுவதும் குற்றச்செயல்கள் குதியாட்டம் போடுகின்றன: சேரிப் பெண்கள் குப்பைப் பைகளில் திணிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறார்கள், அவர்களுடைய முகங்களும் உடல்களும் அமிலத்தால் சிதைக்கப்பட்டிருக்கின்றன. குற்ற விசாரணை யதீனின் பெரும் சாதனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. ஆனால், நிகழ்வுகள் கட்டுப்பாட்டை மீறி விரியும் போதில், அஞ்சலி திகிலூட்டும் வகையில் எல்லாவற்றின் மையத்திலும் இருப்பது தெரிகிறது. வறுமை, பெண்வெறுப்பு, அரசியல் ஊழல் நிறைந்த ஒரு மோசமான உலகில், யதீன் சில கடுமையான தேர்வுகளைச் செய்ய வேண்டும். ஆனால் அவர் கண்டுபிடித்ததெல்லாம் பனிப்பாறையின் நுனியை மட்டுமே. காலம் செல்லும் முன்பாக, அவர் அஞ்சலியுடன் பழைய காயங்களைச் சந்தித்தாக வேண்டும்; நீண்டகாலமாக மறைந்துறையும் இரகசியங்களைத் தோண்டியாக வேண்டும்.
Book Details
Book Title உன் தோலுக்கு அடியில் நீ | You Beneath Your Skin (Un tholukku adiyil nee)
Author தமயந்தி பிஸ்வாஸ்
Translator க.பூரணச்சந்திரன் (Ka.Pooranachchandhiran)
ISBN 978 81 7720 345 5
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 424
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்கள..
₹124 ₹130
இந்தச் சுருக்கமான அறிமுகம், சமகால இறையியலின் மையமான கேள்விகள் பற்றிய சமச்சீரான ஆய்வை, நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அளிக்கிறது. டேவிட் ஃபோர்டின் விசாரனை ரீதியிலான அணுகுமுறை, பெரும்பாலான பெரிய மதங்களில் பிரதானமாக அமைந்திருக்கும் ஈடேற்றம், பழங்கால, நவீன, பின்நவீனச் சூ..
₹114 ₹120