-10 %
Out Of Stock
உறக்கத்திலே வருவதல்ல கனவு
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (ஆசிரியர்)
₹158
₹175
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9788184766912
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இது ஒரு கலாம் காலம். காரணம் சரித்திரத்தில் இடம்பிடித்த ஏவுகணை நாயகராம் மறைந்த திரு. ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் எண்ணமும் எழுத்தும், எழுச்சிமிக்க கவிதை வரிகளும் இளைய சமுதாயத்தினருக்கு உந்து சக்தியாக இருக்கிறது. சமூகப் பொருளாதார வேறுபாட்டை மீறி தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டியவர் கலாம்.
தோல்வியைத் தோல்வியடையச் செய்வதே கலாம் அவர்கள் வலியுறுத்தும் முக்கிய குறிக்கோள். இந்தக் குறிக்கோள் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பினர் வாழ்விலும் ஓர் ஊன்றுகோலாக மாறும் என்பது உறுதி.
‘மாணவர்கள் தங்கள் சிறு வயதிலிருந்தே புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; மனித வாழ்வை செம்மைப்படுத்தும் இனிய நண்பனாக புத்தகம் விளங்கும்' என்று புத்தகத்தின் இன்றியமையாமையை விளக்கி, அநேக புத்தக நண்பர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் கலாம்.
வீடுகள்தோறும் நூலகம் அமைத்து தினமும் வாசித்து செம்மைபெற்று, லட்சியத்தை அடைய வேண்டும் என்கிற கலாமின் கருத்துக்கள் இந்த நூலில் விதைக்கப்பட்டிருக்கிறது. 'என்ன இல்லை நம்மிடம்... என்னால் முடியும்' என்ற நம்பிக்கைதான் நம்மிடம் இல்லை. ஆனால், இந்த நூலை நுகரும் உங்களது ஒவ்வொருவர் இதயத்திலும் இனி அந்த நம்பிக்கை நிச்சயம் பூக்கும்.
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
தண்ணீரை உள்வாங்கும் விதை, வேர்விட்டு செழித்து விருட்சமாவது போல் கலாமின் வழிகாட்டுதல்களை உள்வாங்கும் உங்களது மனம் நிச்சயம் செழித்து மேலோங்கும்.
Book Details | |
Book Title | உறக்கத்திலே வருவதல்ல கனவு (urakkaththile varuvaththlla kanavu) |
Author | ஏ.பி.ஜே.அப்துல் கலாம் (A.B.J.Abdul Kalam) |
ISBN | 9788184766912 |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |