Menu
Your Cart

உழவுக்கும் உண்டு வரலாறு

உழவுக்கும் உண்டு வரலாறு
-5 % Available
உழவுக்கும் உண்டு வரலாறு
கோ. நம்மாழ்வார் (ஆசிரியர்)
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண் துறையில் பணியில் சேர்ந்தவர் நம்மாழ்வார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். நிலங்களில் விதைப்பது வாடிக்கை... இவரோ நிலங்களையே விதைகளாக்கியிருக்கிறார். ஆம். இயற்கை வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து, இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி! இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் இவரது பேச்சு மற்றும் எழுத்தில் சமூகம், இயற்கை, கலாசாரம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், மருத்துவம், விளையாட்டு, சுற்றுச்சூழல் என்று பூமிப்பந்திலிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.
Book Details
Book Title உழவுக்கும் உண்டு வரலாறு (Uzhavukkum Undu Varalaaru)
Author கோ. நம்மாழ்வார் (K. Nammalvar)
ISBN 9788184760866
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year 2021
Category Agriculture | வேளாண்மை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவி..
₹304 ₹320
பலவகையான நிலங்களைப் பற்றியும் அவற்றின் வளங்கள் பற்றியும் அவ்ற்றின் இன்றைய நிலை பற்றியும் விரிவாய் அலசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...
₹105 ₹110
உடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல். நோயைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நோய் வேறு சிகிச்சை வேறு அல்ல என்ற இயற்கை மருத்துவத்தின் கூற்றை விளக்கும் நூல்...
₹29 ₹30
நம்மாழ்வாரின் இயற்கை குறித்தான கட்டுரைகள்...
₹143 ₹150