Menu
Your Cart

ஆயுளை நீட்டிகும் அற்புத மூலிகைகள்

ஆயுளை நீட்டிகும் அற்புத மூலிகைகள்
-5 % Available
ஆயுளை நீட்டிகும் அற்புத மூலிகைகள்
வெ.தமிழழகன் (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் செடிகள், மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவர் போன்றது. ஆனால், நாம் நம் பக்கத்திலேயே மருத்துவரை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, கிராமப்புறங்களில் அடிக்கடி தேள்கடிச் சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. தேள்கடி விஷத்துக்கு, துளசி இலையை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும், கடித்த இடத்தில் அழுத்தித் தேய்க்கவும் தேள்வி­ஷம் உடனே முறிந்துவிடும் என்கிறது சித்த மருத்துவம். இப்படி இயற்கையிலேயே நம் அருகிலேயே மருத்துவ முறை இருப்பதை நாம் மறந்துவிட்டோம். இப்படிப்பட்ட நம் பாரம்பர்ய மருத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த நூல். நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கைத் தாவரங்கள், மரங்கள், காய், கனி, இஞ்சி, மிளகு போன்றவைகளில் என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்றும் மருந்து செய்முறைகளையும் கூறுகிறது இந்த நூல். உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க இந்த நூல் ஆகச்சிறந்த வழிகாட்டி!
Book Details
Book Title ஆயுளை நீட்டிகும் அற்புத மூலிகைகள் (Aayulai neetikkum arputha moolikaigal)
Author வெ.தமிழழகன் (V.Tamizhazhagam)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Jun 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category சித்த மருத்துவம், Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha