Menu
Your Cart

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)
-5 %
இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)
₹211
₹222
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இல்லுமினாட்டி

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள். 

நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிரார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவு பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? 

பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம். 

இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். 

இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது. 

நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது. அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளேஇருக்கிறார்கள் என்பதல்ல. கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து , தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பதுதான் புத்தகத்தின் நோக்கம். 

பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்கவேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்! வாசித்துப் பாருங்கள்!

Book Details
Book Title இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்) (Illuminaatti)
Author கார்த்திக் ஸ்ரீநிவாஸ் (Kaarththik Srinivaas)
ISBN 9789382578888
Publisher வானவில் புத்தகாலயம் (Vaanavil Puththagalayum)
Pages 132
Year 2016
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மர்மயோகி நாஸ்டிரடாமல்சிந்திக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். புறத்தோற்றங்கள், குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதன் சக மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். தன் சிந்தனையின் தீர்க்கம், தன் சந்ததியினரின் மேல் அவை ஏற்பபடுத்திய தாக்கம் போன்ற காரணிகளால் மனிதன் காலத்தை வென்ற ஞானியாக, கடவுளாக வா..
₹316 ₹333
பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ’மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனி..
₹200 ₹211