-5 %
வாழும் சுவடுகள்
நோயல் நடேசன் (ஆசிரியர்)
₹214
₹225
- Year: 2015
- ISBN: 9789352440023
- Page: 240
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த நூலில் நடேசன் தனது கால்நடைமருத்துவ அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கிறார். கால்நடைகள் குறிப்பாக வளர்ப்புப் பிராணிகள் குறித்துத் தமிழில் யாரும் அதிகமாகப் பதிவுசெய்ததில்லை, ஒன்றிரண்டு வளர்ப்புப் பிராணிகள் பற்றிய ஒன்றிரண்டு புத்தகங்களே உள்ளன. ஆனால் மிருகங்களோடு உள்ள உறவும் நெருக்கமும் பற்றிய இலக்கியப் பதிவுகள் மிகக் குறைவே. நடேசன் காட்டும் உலகம் முற்றிலும் மாறுபட்டது. நாய்கள், பூனைகள் நம்மைச் சுற்றியுள்ள மிருகங்கள் இன்று எப்படி நடத்தப்படுகின்றன. அதற்கான நோய்மையை எப்படி நாம் அறியாமல் புறக்கணிக்கிறோம் என்பதைப் பதிவுசெய்திருக்கிறார். நடேசன், உலகை மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கான இடம் என்று பார்க்கவில்லை. மாறாகக் குற்ற உணர்ச்சியோடு மிருகங்கள், பறவைகள், எளிய உயிர்களை மனிதர்கள் தங்களது சுயலாபங்களுக்காக எந்த அளவு வதைக்கிறார்கள். கொலைசெய்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்பதைக் கவனம்கொடுத்து எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் எளிமையும் ஈர்ப்பும் குறிப்பிடப்பட வேண்டியது. அவ்வகையில் வாசிக்கப்பட வேண்டிய முக்கிய நூலாகும். --எஸ். ராமகிருஷ்ணன்
Book Details | |
Book Title | வாழும் சுவடுகள் (Vaazhum Chuvadugal) |
Author | நோயல் நடேசன் (Noyal Natesan) |
ISBN | 9789352440023 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 240 |
Year | 2015 |