Menu
Your Cart

வன்னியாச்சி

வன்னியாச்சி
-5 %
வன்னியாச்சி
தாமரைச்செல்வி (ஆசிரியர்)
₹399
₹420
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை. ‘சுமைகள்’, ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம், ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘பச்சை வயல் கனவு’ போன்ற கனதிமிக்க நாவல்கள்மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனம்காட்டியிருக்கும் இவர் ‘மழைக்கால இரவு’, ‘அழுவதற்கு நேரமில்லை’, ‘வன்னியாச்சி’ போன்ற சிறுகதைத் தொகுதிகளை ஏலவே அறுவடை செய்து சிறுகதைத்துறையிலும் அதிர்வை ஏற்படுத்தியவர். மெய்யனுபவங்களையும் பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவற்றையும் கலாரீதியாகக் கூறி வாசகரிடையே அவற்றினைத் தொற்றவைப்பதோடு தமிழ்ப்புனைகதை இலக்கியத்தில் முகிழ்விடும் நவீனச் செல்நெறிகள் பற்றிய பிரக்ஞைக்கு உட்பட்டு எழுதுவதும் தாமரைச்செல்வியின் வெற்றிக்கான காரணிகள் எனக் கொள்ளலாம். போர்க்காலச் சூழல், போரின் அவலச் சாவுகள். அழிவுகள். பதற்றம் நிறைந்த மனங்கள் ஆகியவற்றைத் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிப்பதில் தாமரைச்செல்வி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். சக்தியற்ற பெண்களின் மௌன உணர்வுகளுக்கு வடிவங்கொடுப்பதில் வல்லமையானவர். இச்சிறுகதைத் தொகுதியும் இவரது திறனுக்குச் சாட்சி சொல்வதாகவே அமைந்திருக்கிறது. - புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
Book Details
Book Title வன்னியாச்சி (Vanniyaachchi)
Author தாமரைச்செல்வி (Thaamaraichchelvi)
ISBN 9789386820150
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2018
Category Short Stories | சிறுகதைகள், Eezham | ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha