Menu
Your Cart

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
-5 %
வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
செ.திவான் (ஆசிரியர்)
₹223
₹235
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன. தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லி வரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்...’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார்? சமணர்கள் கழுவேற்றப்பட்டது எப்படி? பாண்டிய மாமன்னர் இலங்கைத்தீவை பிடித்தது எப்படி-? என பல்வேறு வரலாற்று சம்பவங்களின் சுவையான பின்னணிகளை எடுத்துக்கூறுகிறார் செ.திவான். ஆக, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்... தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக வரலாறு. படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள்!
Book Details
Book Title வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் (Varalaatrin Velichathil Aurangazeb)
Author செ.திவான் (S.Diwan)
ISBN 9788184765212
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு...
₹76 ₹80
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர..
₹105 ₹110
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன..
₹665 ₹700
நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு..
₹219 ₹230