- Edition: 2
- Year: 2015
- Page: 862
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: தினத்தந்தி
வரலாற்றுச் சுவடுகள் - தினத்தந்தி :
பொதுவாக வரலாற்றுப் பாடம் பலருக்கும் ஆர்வம் தரும் பாடமாக அறிமுகமாகவில்லை. குறிப்பாக பள்ளிகளில் வைக்கப்படும் வரலாற்றுப் பாடத் திட்டம் சுவாரசியம் இல்லாமல் தொகுக்கப்பட்டு, சுவாரசியம் இல்லாமலே கற்பிக்கப்படுகிறது.
ஆனால், அதே வரலாற்றுப் பாடத்தை எள்ளளவும் சுவாரசியம் குறையாமல் மக்களுக்கு எடுத்துரைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள நூல் தான் இந்த "வரலாற்றுச் சுவடுகள். தினத்தந்தி துவங்கப்பட்ட 1942 முதல் அப்பத்திரிகையில் வெளியான உலக, தேசிய மற்றும் தமிழகம் சார்ந்த பல்வேறு செய்திகளும் மிக அழகாகத் தொகுக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதை மேலும் மெருகூட்டி, கண்ணுக்கு இனிய பக்க வடிவமைப்பு, நிகழ்ச்சிகளின் தொகுப்பு, காணக் கிடைக்காத புகைப்படங்களுடன், உயர் தரத் தாளில் வெளியிட்டிருப்பது உண்மையில் பாராட்டத்தக்க ஒன்று.
இரண்டாம் உலகப் போரில் துவங்கும் உலக நிகழ்ச்சிகள், இலங்கைப்போர் முடிவுக்கு வந்தது, ஒபாமா பதவியேற்றது வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1940ல் திருநெல்வேலியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜி வெளிப்படுத்திய கருத்துக்களால், காந்தி காங்கிரசை விட்டு வெளியேறியதில் துவங்கும் இந்திய தேசிய நிகழ்ச்சிகள், இந்திய விடுதலை, மகாத்மா மரணம், நெருக்கடி நிலைப் பிரகடனம், போபர்ஸ் ஊழல், ஹர்ஷத் மேத்தாவின் ஹவாலா ஊழல், ராஜிவ் படுகொலை போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளுடன் பயணம் செய்து, மும்பைத் தாக்குதலோடு முடிவடைகின்றன.
"ஜஸ்டிஸ் பார்ட்டி என்ற நீதிக்கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து இந்நூலில் தமிழக வரலாற்று நிகழ்வுகள் பதிவாகின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஆந்திரப் பிரிவினை, தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., விலகல், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆகியவையும் இத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
குறிப்பாக, தி.மு.க, - அ.தி.மு.க.,வை இணைக்க ஜனதா கட்சி செய்த முயற்சி, எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில், ஈ.வெ.ரா.,வின் எழுத்துச் சீர்திருத்தம் போன்ற அதிகம் பிரபலமாகாத ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.
தீயால் சிதைந்த தென்காசி கோபுரம், சென்னை மூர் மார்க்கெட் தீ விபத்து, 23 ஆண்டுகள் அமலில் இருந்த மதுவிலக்கு ரத்து போன்ற குறிப்பிடத் தக்க சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்நூல் கட்டாயம் வாசிக்க வைக்கும் விதத்தில் அமைந்த முயற்சி பாராட்டுதற்குரியது. இன்றைய புத்தக வெளியீடுகளில் தவிர்க்க முடியாத புத்தகம் இது.
Book Details | |
Book Title | வரலாற்றுச் சுவடுகள் (Varalatru) |
Compiler | தினத்தந்தி (Thinaththandhi) |
Publisher | தினத்தந்தி (Thinathanthi) |
Pages | 862 |
Published On | Jan 2015 |
Year | 2015 |
Edition | 2 |
Format | Hard Bound |