Menu
Your Cart

கையறுநதி

கையறுநதி
-5 %
கையறுநதி
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல். கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் சமூகப் பண்பாட்டு வரைவியல் உருவாக்கத்தில் தனித்துவப் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் ஆய்வறிஞர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் கையறு நதி எனும் இந்த வரைவுப் பிரதியோடு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் செம்மையாக்கப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோதுதான், அந்தப் பிரதி என்னையே கொஞ்சம் கொஞ்சமாய்ச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்ததை மெல்ல உணர்ந்தேன். நண்பர்களின் நூல் உருவாக்கத்திலும் செம்மையாக்கத்திலும் எம்மால் இயன்ற உதவிகளையும் வழிகாட்டல்களையும் செய்திருந்தாலும், கையறு நதியில் பயணிக்க நான் கொஞ்சம் மெனக்கெடுக்க வேண்டியிருந்தது. போகிற போக்கிலோ அல்லது அவ்வளவு எளிதாகவோ கடந்துபோகிற புனைவு நூலோ, வரலாற்று நூலோ, ஆய்வு நூலோ இதுவல்ல. இந்த உலகில் வாழும் பலதரப்பட்ட மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல்களுள் கையறு நதியான இந்த நூல் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஆகும். மனப்பிறழ்வு என்பதாகக் கருதப்பட்டு, குடும்பத்தாராலும் பொது சமூகத்தாலும், கல்வி நிறுவனங்களாலும் ஒதுக்கலுக்கு உள்ளான ஓர் இளம்பெண்ணைச் சூழ்ந்திருக்கும் இவ்வுலகத்தையும், அதனை அப்பெண் அணுகும் விதங்களையும், அப்பெண்ணுக்குத் தகப்பனாய் வாய்த்திருக்கும் ஓர் ஆண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், தமது மகளுக்கும், மகளைப் போல பிற மனிதர்களுக்கும் நேர்ந்திருக்கும் உடலியல் சார்ந்தும் உளவியல் சார்ந்துமான இடர்ப்பாடுகள் நிரம்பி வழியும் உலகைக் காணும் விதங்களும் தமிழ்ப் புனைவுகளிலோ அல்லது தன்வரலாற்று நூல்களிலோ விரிவாகவோ ஆழமாகவோ புலப்படுத்தப்படவில்லை. கையறு நதி எனும் இந்த நூல்தான், புனைவின் வழியாகத் தன்வரலாற்றைப் பேசுவது அல்லது தன்வரலாற்றைப் பேசுவதுபோல புனைவெழுத்தாக்கித் தருவது எனும் எழுத்துப் பாணியில் மகளுக்கும் அப்பாவுக்குமான உணர்வுப்பூர்வமான உறவையும், உயிர்ப்பான நேயத்தையும் உளவியல்பூர்வமான பரிமாணங்களையும் சக மனிதர்களுக்கு எழுத்து வழியாகப் பகிர்ந்திருக்கிறது.
Book Details
Book Title கையறுநதி (kaiyarunathi)
Author வறீதையா கான்ஸ்தந்தின் (Vareethiah Konstantine)
Publisher கடல்வெளி பதிப்பகம் (Kadalveli Publication)
Pages 198
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Psychology | உளவியல், Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இன..
₹171 ₹180
மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர்  வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..
₹76 ₹80
வேளம் ( உரையாடும் தமிழ் நெய்தல்)உரையாடலை குறிக்கும் நெய்தல் நிலத்தின் வட்டாரச் சொற்கள் வேளம், ஒச்சியம், தூப்பம் இழப்பையும் அதன் காலவழியையும் கண்டறியும் சமூக மனம் இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அடையாளத்தை மீள நிறுவிக் கொள்ளும். இழப்பின் வலியை நெய்தல் இளைஞர்கள் உணர்ந்துக்கொள்ள திணை நிலத்தின் உள்ள..
₹95 ₹100
Verses of the waves - ..
₹48 ₹50