-5 %
அம்பேத்கரும் அவரது தம்மமும்
வசுமித்ர (ஆசிரியர்)
₹846
₹890
- Edition: 1
- Year: 2019
- Page: 920
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குறளி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்துத்துவம் மேலெழும் காலத்தில் அம்பேத்கரை விமர்சிப்பதென்பது எதி்ரிகளுக்கு பலத்தை அளிக்கும் என்ற சமத்காரமான விவாதமும், தலித் அடையாள அரசியலை முன்வைத்துக் கட்டி எழுப்பப்பட்டது. அப்படியென்றால் அம்பேத்கர் காலத்தில் இந்துத்துவம் மேலெழும்பவில்லையா? இல்லை, அம்பேத்கரே இரண்டாயிர வருட காலம் பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டமே தலித்தியப் பிரச்சினை என்று சொல்லியதில்லையா?
பார்ப்பனியம் எப்பொழுது ஓய்ந்திருந்தது? அதே இந்துத்துவம் மேலோங்கும் காலத்தில்தான் கம்யூனிஸ்டுக் கட்சிகளை பார்ப்பனக் கட்சிகள் என்று சொல்வார்களா? பெரியார் தலித்துகளுக்கு எதுவுமே செய்யவில்லை, அவர் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் என விவாதிப்பார்களா? இவைகளும் கேள்விகளே. ஆக, தங்களது தலைவரின் வரலாற்றுத் தவறுகளை விமர்சகர்கள் சுட்டிக்காட்டினால் இவர்களுக்கு வரும் பதட்டமும், தங்களது பிழைப்பாதாரத்தில் விழப்போகும் மண்ணுமே இத்தகைய ஆய்வாளர்களைப் பதற்றமடையச் செய்கிறது. தங்களுக்குக் கீழ் இருக்கும் தலித்துகளை வாக்கு எண்ணிக்கைக்கும், முதலாளிகளுக்கும் சேர்ந்து இவர்கள் காட்டும் தலைக் கணக்கு குறைந்துவிடக் கூடாது என்பதே இவர்களது தலித்தியம்
எல்லாவற்றிற்கும் மேலாக உலகமயமாக்கலுக்குப் பின் பார்ப்பனியத்திற்கான வரையறைகள் என்ன? பண்பாட்டு அம்சத்தை வைத்து மட்டும் உலகமயமாக்கலை விவரிக்க முடியுமா?
மார்க்ஸ் கூறியது போல் ;தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் அவசியமாக இருப்பது துணிவான சிந்தனையே அந்தத் துணிவை அடையாள அரசியலின் பின்னாலும், சார்பு நிலைகள் மூலமும் முன்வைக்கக் கூடாது.
மூத்தவர்களை விமர்சனம் செய்யும் போக்கு அசட்டுத் துணிச்சலையும், அகங்காரத்தையும் வளர்க்கும் என்பதையும் நான் அறிவேன். இதைத் தவிர்க்கப் பாதுகாப்பான வழி, மூத்தவர்களை கூடிய மட்டும் அவர்களையே எதிர் எதிராகப் பேசவிடுவது ஆகும். என்ற தேவிபிரசாத்தின் இத்தகைய வார்த்தைகளையே வழிகாட்டுதலாக நானும் பின்பற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன்.
வசுமித்ர, அம்பேத்கரும் அவரது தம்மமும் நூல் முன்னோட்டத்தில்.
Book Details | |
Book Title | அம்பேத்கரும் அவரது தம்மமும் (Ambedkarum avarathu thammamum) |
Author | வசுமித்ர (Vasumithra) |
Publisher | குறளி பதிப்பகம் (kurali publication) |
Pages | 920 |
Published On | Jan 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தலித்தியம், பௌத்தம் |