Menu
Your Cart

வீரர் உலகம்

வீரர் உலகம்
-5 %
வீரர் உலகம்
கி.வா.ஜகந்நாதன் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரங்களும் இன்றும் இந்த வீரர் உலக நிகழ்ச்சிகளை அறியத் துணை செய்கின்றன. அப்படியே புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள உதாரணச் செய்யுட்களும் பழைய உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோட் பாடல்களும் அவற்றின் விரிவை அறிந்துகொள்ளப் பயன்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு கோவைப்படுத்தி எழுதியதே இந்தப் புத்தகம். புறப்பொருளின் இலக்கணத்தை விளக்க வேண்டுமென்றோ, அவ் விலக்கணம் எவ்வாறு தோன்றி விரிந்து வளர்ந்தது என்பதை ஆராய்ச்சி முறையில் உணர்த்த வேண்டுமென்றோ எண்ணி இதனை யான் எழுதவில்லை. அந்த இலக்கண இலக்கியங்களால் புலனாகும் வீரப் பண்பின் சிறப்பையும் அதனால் விளைந்த வீரர் செயல்களையும் ஒழுங்குபடுத்தி இணைத்துக் காட்டவேண்டும் என்பதே என் கருத்து. சீனர் நம் பாரத நாட்டின்மேல் படையெடுத்த காலத்தில் நாடு முழுவதும் ஒரே எண்ணத்தோடு எழுந்து, பகைவனுக்கு மாறக ஒரே குரலை எழுப்பியது. அந்தச் சமயத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வீரர் உலகத்தை ஒருவாறு காணும்படி செய்யலாம் என்ற விருப்பத்தினால் இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 'கலைமகளில் பதினேழு மாதங்கள் இக்கட்டுரைத் தொடர் வெளியாகியது. கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட எண்ணியபோது இறுதியில் ‘பின்னுரை' என்ற ஒன்றை எழுதிச் சேர்த்தேன். தமிழ் மக்களின் வீரம் பழங்காலத்தில் எவ்வாறு உயர்ந்து நின்றதென்பதை ஓரளவு அறிவதற்கு இச் சிறு நூல் உதவுமென்றே நம்புகிறேன்.
Book Details
Book Title வீரர் உலகம் (Veerar Ulagam)
Author கி.வா.ஜகந்நாதன் (Ki.Vaa.Jakannaadhan)
Publisher மெய் நிழல் (Mei Nizhal)
Pages 140
Year 2023
Edition 1
Format Paper Back
Category தமிழர் வரலாறு, Award Winning Books | விருது பெற்ற நூல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஐயரவர்கள் தம்முடைய வரலாற்றை எழுத வேண்டுமென்று அடிக்கடி பலர் வற்புறுத்தி வந்தார்கள். அதனால் 6-1-1940 முதல் ஆனந்தவிகடனில் ஒவ்வோர் இதழிலும் தம் வரலாற்றை வெளியிட்டு வந்தார்கள். 1942ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தச் 'சுயசரிதம்' வெளியாயிற்று. 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயரவர்கள் அமரராகிவிட்டார்கள். ஆகவே 1..
₹219 ₹230