- Year: 2014
- ISBN: 9789382033257
- Page: 344
- Language: தமிழ்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
”வெல்லிங்டன்” யதார்த்த நாவல் வகையைச் சார்ந்தது.பலரும் தங்கள் முதல் நாவலை சுயவாழ்வை யும் சுய அனுபவத்தை யும் பின்னணி யாக கொண்டு எழுதியிருப்பது போலவே சுகுமாரனும் இந்நாவலை படைத்தளித் துள்ளார். ”வெல்லிங்டன்” என்னும் ராணுவ பயிற்சி மையம் இந் நாவ லுக்கு மையமாக இருந்தாலும் அதிலிருந்து கிளை பிரிந்து சென்று அங்கு வாழும் மனிதர்களை பற்றியே இந்நாவல் அக்கறையுடன் பேசுகிறது. இந்நாவலுக்குள் ஆசிரியரின் குரலை யோ தலையீட்டையோ எங்கும் உணர முடிய வில்லை.ஒரு சிறுவனின்(பாபு) கண்வழி செவிவழி விரியும் இந்நாவ லில், ’உதகமண்டலத்தின் கண்டுபிடிப ்பாளனாகிய’ ஜான் சல்லிவானைப் போலவே அச்சிறுவனும் புதிய இடங் களை நோக்கிச் செல்வது நுட்பமாக நாவலுக்குள் உணர்த்தப்பட்டுள்ளது.
நாவல் மூன்று பிரிவுகளாக அமைக்கப ்பட்டுள்ளது .மூன்றுக்கும் வெவ்வே றான மொழிநடைகளை நாவலாசிரியர் கையாண்டிருக்கிறார்.சூரியன் அஸ்த மிக்காத ராஜ்ஜியத்தின் அதிகாரியான ஜான் சல்லிவன் மலைகளின் அரசியை தன் சகாக்களோடு கண்டடைந்து வழித் தடங்களை நிர்மானித்து அதை குடியிரு ப்புகளாக மாற்றி அமைப்பது முதல் பகுதி.கொடிய குணங்கள் கொண்டவ ர்களாக பொதுபுத்தியில் அறியப்ப ட்டிருக்கும் ஆங்கிலேயே அதிகாரிகளு க்கு மாற்றாக சல்லிவன்
Book Details | |
Book Title | வெல்லிங்டன் (velington) |
Author | சுகுமாரன் (Sukumaran) |
ISBN | 9789382033257 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 344 |
Year | 2014 |
Category | Novel | நாவல் |