
- Edition: 5
- Year: 2018
- Page: 97
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: செம்மை வெளியீட்டகம்
வேட்டல்:விருப்பத்தில் நிலைபெறுதல் - ம .செந்தமிழன்:
சமூக மதிப்பீடுகளும், பொருளாதாரத் தேவைகளும் தரும் அழுத்தங்கள் முற்றிலும் பொருளற்றவை. அதை நோக்கிச் செய்யப்படும் எல்லாக் கணக்கீடுகளும், எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் கண நேரத்தில் உடைந்து சிதறக் கூடியவை, விருப்பத்தில் நிலை பெற்று, ஒப்படைக்கப்பட்ட வாழ்க்கை வாழ்தலே இன்பமான, இயல்பான, நோயற்ற, பாதுகாப்பான, வாழ்க்கைக்கான தீர்வு. வேட்டல் என்பது வெறுமனே இது வேண்டும் என்று கேட்பது அல்ல. வேட்டல் என்பது விருப்பத்தில் நிலைபெறுதல். வேட்டல் என்பதன் பொருளை அனுபவங்களின் வழி மட்டுமே உணர்த்த இயலும். அந்த அனுபவப் பயணத்துக்கு இந்த நூல் இட்டுச் செல்கிறது.
வேட்டல் என்றால்
வேண்டுதல் என்று பொருள்.
வேண்டுதல் என்பது விரும்புதல்
என்பதன் வேறு சொல்.எது
வேண்டும் எனக் கேளுங்கள்;
அது கிடைக்கும்.எது வேண்டாம் என்பதைச் சிந்திக்காதீர்கள்.
அந்தச் சிந்தனை உங்களைச்
சிதைக்கும்.இது படைப்பின் மறைபொருள்.
Book Details | |
Book Title | வேட்டல் (விருப்பதில் நிலைபெறுதல்) (Vettal) |
Author | ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan) |
Publisher | செம்மை வெளியீட்டகம் (Semmai Publication) |
Pages | 97 |
Year | 2018 |
Edition | 5 |
Format | Paper Back |