யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழ சாதிய அமைப்பின் யதார்த்தத்தை, நடைமுறையை வலி ஓடும் சொற்களில் ஈழ விடுதலைப் போரின் பின்னணியாக நிறுத்துகின்றது இந்நூல். ஈழத்தின் போராட்டம் மரபுரிமையின் அடிப்படையில் "தமிழகத்தின் போராட்டங்களிலிருந்து" தீவிரமாக வேறுபட்டு நிற்பதை தெளிவாக வரையறுக்கும் ஒரு வாழ்க்கை வரலாறு...
நீட்சே குறித்து மிகவும் ஆழமாக, அழகாக, எளிமையாக வில் டியூரண்ட் எழுதியிருக்கும் பகுதியினை முழுமையாக அதன் அழகியல்தன்மையும், தத்துவ அம்சங்களும் சற்றும் பிசகாமல் இந்நூலில் மொழி பெயர்த்துள்ளார் இந்திரா காந்தி...
பரந்து விரிந்த சீனத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற பாரிய மாற்றங்களை ஆய்கின்ற இந்நூல் சமவெளி பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்களை உயிர்ப்பான முறையில் எடுத்துக் காட்டுகிறது...
நாட்டில் ஜாதி உணர்ச்சி வேரூன்றிக்கிடக்கிறது. அதுவும் பார்ப்பனரிடையே இந்த உணர்ச்சி பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் மட்டும் இந்த உணர்ச்சிக்கு விலக்காயிருக்க முடியுமா? இப்படிக்கூறவது சட்டப்படி குற்றமாகவும், கோர்ட் அவமதிப்பாகவும் கருதப்படலாம்...
பட்டினிப் புரட்சி(உணவு-உழவு-சூழல்-குமுகம்) - பரிதி :சுமார் தொண்ணூறு லட்சம் உயிரின வகைகள் இவ்வுலகில் வாழ்கின்றன.மனித இனம் அவற்றில் ஒன்று.740 கோடி மக்களும் பிற உயிரினங்களும் நலமாக வளமுடன் வாழ்வதற்குப் போதுமான வளங்கள் புவியில் உள்ளன.நம் தேவைக்கு அதிகமான அளவு உணவு உற்பத்தியாகிறது.இருப்பினும்,பட்டினி , ச..