Menu
Your Cart

ஷாஜி இசைக்கட்டுரைகளின் முழுத்தொகுப்பு

ஷாஜி இசைக்கட்டுரைகளின் முழுத்தொகுப்பு
-5 % Out Of Stock
ஷாஜி இசைக்கட்டுரைகளின் முழுத்தொகுப்பு
ஷாஜி (ஆசிரியர்)
₹314
₹330
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உயர்திணை முதல் அஃறிணை வரை அனைத்து உயிர்களையும் தன்வசப்படுத்தும் இயல்புள்ளது இசை. பண்டிதன் முதல் பாமரன் வரை ரசிக்கும், ருசிக்கும், பரவசப்படும் மகத்துவம் கொண்டது இசை. கலைகளில் ஓவியம் சிறந்ததாய் இருக்கலாம். ஆனால் இசைதான் எல்லோரையும் ஈர்க்கிறது, கேட்பவர் மனதில் இன்பத்தை வார்க்கிறது. புகழ்பெற்ற இசைப் பாடகர்களைப் பற்றி, இசையமைப் பாளர்களைப் பற்றி, இசைக் கலைஞர்களைப் பற்றி, இசைக் கலாசாரங்களைப் பற்றி, இசை வகைமைகளைப் பற்றி, சுவை குன்றாத சிறுகதைப் போக்கில் பேசுகிறது இந்த நூல். பாப் மார்லி போன்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் தனித் திறன்களையும் இந்தி, தமிழ், மலையாள திரைப்பட இசையமைப்பாளர்கள் பற்றியும், பின்னணிப் பாடகர்களின் தனித்துவமான குரல் வளம் பற்றியும் விரிவாக ஆய்வு நோக்கில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் ஷாஜி. பல இசை நிறுவனங்களில் இசைப் பதிவு மேலாளராகப் பணியாற்றியபோது, தனக்கு கிடைத்த அனுபவங்களையும் தான் சந்தித்த இசை ஆளுமைகளைப் பற்றியும் சமரசம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் ஷாஜி. 2005 முதல் 2015 வரை இசை தொடர்பாக ஷாஜி எழுதிய மொத்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது! இசை மட்டுமல்ல இசை தொடர்பான சம்பவங்களும் சுவாரஸ்யமானதே...
Book Details
Book Title ஷாஜி இசைக்கட்டுரைகளின் முழுத்தொகுப்பு (Complete essays of Shaji's music notes)
Author ஷாஜி (Shaaji)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 710
Published On May 2016
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஏழு வயதில் ஒரு வாதையாகத் தலைக்கேறியது தான் சினிமாவின் மேலான் எனது வெறி. அதற்கு பைத்தியமாக அவ்வப்போது பலவகையான பேயோட்டும் வேலைகளை முயன்று பார்த்திருக்கிறேன் எதுவுமே பலனலிக்கவில்லை சினிமா இசைக்குப் பின்னாலும் பைத்தியம் பிடித்து அலைந்தேன், ஆரம்ப காலத்தில் ஒரு பாடகனாக மாற முயன்று பார்த்திருக்கிறேன், பாட..
₹375 ₹395
பார்காத படத்தின் கதை, நமது காலம் நமது ரசனை, பறவை பயணங்கள், உலக இசைப் பாடல், உலகக் கவிதை என மாறுபட்ட தலைப்புகளில் உயிர்மை, அந்திமழை, ஹிந்து தமிழ், படச்சுருள், தீரந்துய் இதழ்களில் ஷாஜி எழுதிய தொடர்களின் தொகுப்பு இப்புத்தகம்...
₹238 ₹250
ஷாஜி எழுதும்போது உலகலாவிய இசையையும் அதன்பின் இயங்கும் மனித மனத்தையும் புரிந்துகொள்வதற்கான பல பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறு வயதிலிருந்தே அவதானித்துக் கேட்ட இசைகளின் தாக்கம் தனது வாழ்வை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்று அவர் கூறும்போது அது வாசகனின் இசை நினைவுகளாகவே உருமாறுகின்றன. எளிமையான, கவித்து..
₹627 ₹660