Menu
Your Cart

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு
-5 % Available
கைக்கு எட்டும் தூரத்தில் அழகு
ராஜம் முரளி (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா? தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய உறுப்புகளை ஒழுங்காகப் பராமரித்தாலே அழகாகத் திகழலாம்’ என்கிறார், இயற்கை அழகுக் கலை நிபுணர் ராஜம் முரளி. ஏற்கெனவே, `அழகைப் பராமரித்தல்’ குறித்து இவர் எழுதி, நமது பிரசுரத்தில் வெளிவந்துள்ள நூல்கள், வாசகர்களிடையே, முக்கியமாக பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இப்போதும், பல நூறு டிப்ஸ்களை அள்ளி வழங்கி இருக்கிறார். நம் அழகைப் பேணிப் பராமரிக்க உதவும் பொருட்கள் எல்லாம் எங்கேயோ எட்டாத தூரத்தில் இல்லை... எல்லாமே நம் வீட்டில், நாம் அடிக்கடி புழங்கும் பொருட்கள்தான். பால், தயிர், வெந்தயம், எண்ணெய், மருதாணி, கறிவேப்பிலை, மிளகு என்று நம் அடுக்களையில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான அழகு சிகிச்சை செய்துகொள்ளக் கற்றுத் தருகிறார். வெட்டிவேர், ரோஜா இதழ்கள், புங்கங்கொட்டை போன்ற மற்ற சில பொருட்கள் நாட்டுமருந்துக் கடையில் கிடைப்பவையே! தயாரிக்கும் முறையையும் உபயோகிக்கும் விதத்தையும் அதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் எளிமையாக வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த கேள்விகளுக்கு விரிவாக விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவை, எல்லோருக்குமே பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இனியும் தாமதிக்காமல், உங்கள் கைக்கு எட்டும் தூரத்திலேயே காத்திருக்கும் அழகை, உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அழகுடன் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகள்!
Book Details
Book Title கைக்கு எட்டும் தூரத்தில் அழகு (Kaiku Ettum Thoorathil Azhagu)
Author ராஜம் முரளி (Rajam Murali)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்த..
₹105 ₹110
இளமை அழகானது இனிமையானது. இளமையைப் பாதுகாத்துத் தக்கவைத்துகொள்ள எல்லா வயதினருக்கும் ஆசைதான். பெண்கள் எப்போதும் தங்களை அழகாக்கிக் கொள்வதில் அதீத ஆர்வம்கொண்டிருப்பர். இது இயற்கை யான உணர்வு. எல்லோரும் விரும்புவதும் இதுதான். ஆனால், உபயோகப்படுத்தும் காஸ்மெடிக்ஸ், ரசாயனம் நிறைந்த அழகுப் பொருள்களால் ஏற்படும..
₹280 ₹295