Menu
Your Cart

மல்லிகைக் கிழமைகள்

மல்லிகைக் கிழமைகள்
-5 % Out Of Stock
மல்லிகைக் கிழமைகள்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும். ஒன்று அனுபவத்தின் வாயிலாகத் துய்த்துணர்ந்து எழுதுவது. மற்றொன்று கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது. இந்த இரண்டு முறைகளுமே தமிழ்க் கவிதையுலகில் கையாளப்பட்டு வருகிற நடைமுறைகள்தான். ஒரு சிலருக்கு இந்த இரண்டு நடைகளுமே வாய்த்துவிடுவது உண்டு. அது பயிற்சியிலிருந்து வருவது. பிரான்சிஸ் கிருபா இரண்டாவது வகைக் கவிஞர். கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது இவருக்குக் கை வந்திக்கிறது. ஆனந்த விகடனில் இவரது கவிதைகள் மல்லிகைக் கிழமைகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளிவந்தபோது, கவிதை எழுதாத பலரும் தங்களுக்குள்ளும் கவிதை மனசு இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொன்னது போல உள்ளத்து உள்ளது கவிதை... உண்மை தெளிந்துரைப்பது கவிதை என்பது இந்த இடத்தில் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது. கவிஞர் ஒரு கவிதையில் எழுதுவார்... மரங்களுக்கு மேலே பறவைகள் இருந்தன பறவைகளுக்கு மேலே மேகங்கள் இருந்தன மேகங்களுக்கு மேலே வானம் இருந்த
Book Details
Book Title மல்லிகைக் கிழமைகள் (Malligal Kialamaigal)
Author ஜெ.பிரான்சிஸ் கிருபா (J.Francis Kiruba)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சம்மனசுக்காடுபிரான்சிஸின் அலைபேசி எண்கள் எதுவும் நிரந்தரமில்லை. ஆறு எண்கள் என்னிடம் இருக்கின்றன. எதனிலும் இன்றைக்குக் காலை அவர் கிடைக்கப்போவதில்லை. ஏழாவது எண் அவராகக் காட்சியளிக்கும்போது கிட்டக்கூடும்.புனித பிரான்சிஸை மலையாளத்தில் ‘புண்ணியாளன் பிரான்சிஸ்’ என்பார்கள். மக்கள் மொழியில் ‘பிராஞ்சி’;மூத்த..
₹90 ₹95
கன்னி - நாவல்:ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் கு..
₹920