Menu
Your Cart

மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான்
-5 % Out Of Stock
மனிதன் மாறிவிட்டான்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடியேதான் இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதுதான் இந்த ‘மனிதன் மாறிவிட்டான்’! உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் ஏதாவது ஒரு காரணத்துக்காக நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த உறுப்பு என்ன காரணத்துக்காக படைக்கப்பட்டதோ அந்த காரணத்துக்காக பயன்படுத்தி இருக்கிறோமா என்று இந்தப் புத்தகம் யோசிக்க வைக்கிறது. மனசுக்கும் உறுப்புக்கும் உள்ள தொடர்பையும் சம்பந்தத்தையும் இதைவிட எளிமையாக சொல்வது கடினம். ‘கண்கள் பலவிதமான உடல்மொழிகளைப் பரிமாறுகின்றன. கண்களைக் கீழே குவிப்பது அடக்கத்தை உணர்த்துகிறது. கண்களை உயர்த்துவது களங்கமற்ற தன்மையை உணர்த்துவதாக இருக்கிறது. கண்களை உற்றுப் பார்ப்பதும், மௌனமாக இருப்பதும் குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்த பயன்படுத்தும் உத்தி. கண்களை அகலப்படுத்துவது ஆச்சர்யத்துக்கான அறிகுறி. கண்களை குறுக்குவது கூர்மையாகப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் உடல்மொழி. கண்ணடிப்பது என்பது இருவருக்குள்ளான ரகசிய பரிமாற்றத்தை ஏற்படுத்துகிறது’ என்று கண்களைப் பற்றி விவரிக்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் ஆசிரியர். ஜூனியர் விகடனில் தொடராக வந்த சமயத்தில் ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் நூலின் ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அந்த கேள்விகளுக்கான விடைகளை தொடரின் இறுதியில் குறிப்பிட்டார். அவர் கேட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட மூன்று விடைகளுமே பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் முடிவில் அவர் கொடுத்த சரியான விடையும் அதற்கான காரணமும் நியாமனதாக இருந்தது. தொடராக வந்த சமயத்தில் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ‘மனிதன் மாறிவிட்டான்’ இப்போது நூல் வடிவத்தில் உங்கள் கைகளில் தவழ்கிறது. நிச்சயம் இது மீண்டும் உங்களைப் படிக்கத் தூண்டும். பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷமாகவும் இருக்கும்!
Book Details
Book Title மனிதன் மாறிவிட்டான் (Manitham Marivittan)
Author வெ.இறையன்பு (V. Iraiyanbu)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹314 ₹330
படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
மென் காற்றில் விளை சுகமே!வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தை காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.அதில் வெ.இறையன்புவும் ஒருவர்.வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியை பெறுவதற்கான ஒரு ..
₹138 ₹145
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாத..
₹1,045 ₹1,100