Menu
Your Cart

மயக்குறு மகள்

மயக்குறு மகள்
-5 % Available
மயக்குறு மகள்
₹133
₹140
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அது செய்த குறும்புகளிலும் பேசிய மழலைப் பேச்சுகளிலும் மயங்கிய அன்னை தமிழ்மொழியில் அதை வர்ணித்து, வடித்து எழுதிய பிள்ளைத்தமிழ் நூல் இது. பிறந்த குழந்தை தனது பிஞ்சு விரலால், தத்தி தத்தி நடக்கும் பஞ்சு கால்களால், கொஞ்சி கொஞ்சி பேசும் மழலை மொழியால், சில நேரங்களில் பொய்யாய் ஏமாற்றி பேசுவதும்... பல நேரங்களில் தன் சுட்டித்தனத்தால் எல்லோரையும் வியந்து பார்த்து ரசிக்கும் வகையில்... என நடந்த மொத்த நிகழ்வுகளையும் பொக்கிஷமாக இந்த அன்னை வடித்துத் தந்திருப்பது நூலின் சிறப்பாகும். “ ‘க்’ மாதிரி சம்மணம் போட்டு உட்காரு...” என்ற அன்னையிடம் “அம்மா, இன்னிக்கு ஒரு நாள் ‘த்’ மாதிரி காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறேனே” என்கிறபோது இங்கே தாய்க்கும் மகளுக்குமான தமிழ்மொழியின் உரையாடல் வியங்கவைப்பதோடு மயங்கவும் வைக்கிறது. பல நேரங்களில் தன் அன்னையை குழந்தையாகவும் தன்னைத் தாயாகவும் நினைத்து சீராட்டுவதைக் கண்ட அன்னையின் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இருக்காது. மயக்குறு மகளின் குறும்புகள் அடங்கிய இந்த நூல், உங்களது மழலைப் பருவத்தையும் உங்கள் பிள்ளையின் பொன்னான குழந்தை பருவத்தையும் நினைப்பூட்டி கண் முன்னால் திரையிட்டுக் காட்டும் என்பதில் ஐயமில்லை.
Book Details
Book Title மயக்குறு மகள் (Mayakkuru magal)
Author காயத்ரி சித்தார்த்
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 207
Published On May 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது...
₹124 ₹130