Menu
Your Cart

நாட்டு மருந்துக் கடை

நாட்டு மருந்துக் கடை
-5 %
நாட்டு மருந்துக் கடை
கு சிவராமன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக்குப் பயனளிக்கிறது. மிளகு, வெந்தயம், பெருங்காயம் இவற்றைத் தொடர்ந்து அதிகம் உபயோகப்படுத்தாத அதிமதுரம், திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு போன்ற மருத்துவ காய்களில் நலம் தரும் நற்குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவ்வரிசையில் பூக்கள், எண்ணெய் வகைகள்கூட விட்டு வைக்கப்படவில்லை. அதைக் குழந்தை மற்றும் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் முறைகளை அழகாய் சொல்லிக்கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். அயல்நாட்டவர் இவ்வகை அரிய அற்புத மூலிகைகளைக் கண்டறிந்து தங்களுக்கென உரிமை கொண்டாடினாலும் இவற்றின் பிறப்பிடம் நம் இடமாகவும் நம் முன்னோர்கள் கையாண்ட பாரம்பர்ய சித்த மருத்துவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அழியாமல் காத்திட முன் வருவோம் நம் பாட்டன் சொத்தான பாரம்பர்யத்தை. கோடைகாலத்தில் வரும் பிரச்னையை ஒரு முள்கூட குணப்படுத்த முடியும் என்கிற அரிய வழிமுறைகள் அடங்கிய சித்த மருத்துவம் இருக்க, காலப்போக்கில் நவீனமயமாக்கல் எனத் தொடங்கிய சமூக பொருளாதார வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் மேலோங்கி கோலோச்சியபோது, துரித உணவுகளால் மனிதன் ஆரோக்கிய உணவை இழந்து, இறுதியில் கொசுறாக எழுதப்படும் மாத்திரையை கூடுதல் விலைகொடுத்து வாங்கி, உடலுக்குக் கேடு விளைவித்து உயிரிழந்ததே மிச்சம். இன்றோ தாம் உண்ணவேண்டிய உணவு எது? உடல் நலம் பேண, ஆயுள் காக்க மனிதன் மீண்டும் மறந்த மறைந்த முன்னோர்களின் மருத்துவத்தை வழக்கத்துக்குக் கொண்டுவரும் கட்டாயத்தில் இருக்கிறான். நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளால் கண்களைப் பாதுகாக்கும் சக்தி கறிவேப்பிலைக்கும் உண்டு என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் தந்திருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். டாக்டர் விகடனில் தொடராக வந்த ‘நாட்டு மருந்துக்கடை’க்கு வாருங்கள்; நோயில்லா வாழ்வை வாழ, அறிவோம் அற்புதங்கள் செய்யும் பாரம்பர்ய மருத்துவத்தை!
Book Details
Book Title நாட்டு மருந்துக் கடை (Nattu marudhu)
Author கு சிவராமன்
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year 2021
Edition 1
Format Paper Back
Category சித்த மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பி உண்ணக்கூடிய அவசர அடியில் சமைத்த உணவுகள், 2 மினிட்ஸ் உணவுகள் என சிறுவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இப்போது பெர..
₹152 ₹160
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவி..
₹152 ₹160
நாற்பது வயது என்பது மனித வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலே, சிலருக்கு இதுவரை வாழ்க்கைக்காகப் போராடிய சலிப்பும் ஒருவித ஆயாசமும் அவ்வப்போது தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்துக்காக ஓயாமல் ஓடிய களைப்பும் இந்த வயதில் எட்டிப்பார்க்கும். நமது சுற்றுப்புறச் ச..
₹260
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் வாழ்வோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது இ..
₹261 ₹275