Menu
Your Cart

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்
-5 %
ரங்க ராஜ்ஜியம்
₹618
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மண்ணுலகின் வைகுந்தம் என ஆன்மிக அன்பர்களால் போற்றிப் புகழப்படும் திருத்தலமாகவும், எண்ணியதும் புண்ணியம் தரும் அருட்தலமாகவும் திகழ்வது ரங்கம். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மைத் தலம் எனும் பெருமை பெற்ற அத்திருத்தலத்தில் சயனக் கோலம் கொண்டு சகல உயிர்களுக்கும் அருள்புரிந்துகொண்டிருக்கிறார் அரங்கநாதர். யுக யுகங்களுக்கு முன்னால் தன்னிலிருந்து பிரம்மனைப் படைத்த பரம்பொருளான திருமால், பிரம்மாவின் தவத்தால் பிரணவாகார விமானத்துடன் சத்ய லோகத்தில் தோன்றி பின்னர் பூவுலக ரங்கத்தில் நிலைகொண்டார். சத்யலோகத்தில் காட்சி தந்த எம்பெருமான் இப்பூவுலகுக்கு எப்படி, யாரால் வந்தார், ரங்கத்தில் நிலைகொள்ளும் முன்னர் வேறு எவ்விடத்தில் அருள்பாலித்துக்கொண்டிருந்தார் என்பதை விவரித்து சக்தி விகடனில் ‘ரங்க ராஜ்ஜியம்' எனும் தலைப்பில் இந்திரா செளந்தர்ராஜன் எழுதிய முதல் பாகத்தின் தொகுப்பு இந்நூல். பிரணவாகாரப் பெருமான் மண்ணுலகுக்கு வந்தது முதல் சில நூற்றாண்டுகள் வரை அரங்கன் ஆலயம் சந்தித்த சம்பவங்கள் வரை இந்த முதல் பாகம் சொல்கிறது. ஓர் ஊழிப் பெருவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு சில காலம் மண்ணுள் மறைந்திருந்த அரங்கன் ஆலயம் எப்படி வெளிப்பட்டது? அதன்பின் நிகழ்ந்த அரங்கனின் மகிமைகள், ரங்கம் ஆலயம் தொடர்பான நிகழ்வுகள் சரித்திரத்தில் எவ்வாறெல்லாம் பதிந்துள்ளன என்பதை தன் வசீகர எழுத்து நடையால் இந்த ரங்க ராஜ்ஜியத்தில் வடித்துத் தந்திருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன். இனி அரங்கனின் அற்புதங்களை அறிந்து அவன் அருளைப் பெற வாருங்கள்.
Book Details
Book Title ரங்க ராஜ்ஜியம் (Ranga Rajyam)
Author இந்திரா சௌந்தர்ராஜன் (Indhiraa Sowndharraajan)
ISBN 9788195164769
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Hard Bound
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், செய்த அதிசயங்கள், மக்களுக்குச் செய்த நன்மைகள், மொத்தத்தில் ஆன்மிக வாழ்க்கைக்குச் செய்..
₹309 ₹325
ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா ..
₹238 ₹250
OUT OF THE BLUE - Indra Soundar Rajan(Translator - Aswini Kumar):..
₹380 ₹400