Menu
Your Cart

தமிழ் சினிமாவில் பெண்கள்

தமிழ் சினிமாவில் பெண்கள்
-5 % Out Of Stock
தமிழ் சினிமாவில் பெண்கள்
கே.பாரதி (ஆசிரியர்)
₹105
₹110
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது. நூறு வருட தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்புக் குறித்தும் அவர்களுக்கு சினிமாவில் கிடைத்த இடம் குறித்தும் இந்தத் தருணத்திலாவது பேச வேண்டும். பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பது மிகமிகக் குறைவு. பொதுவாகத் தமிழ் சினிமா, பெண்களை வணிகத்துக்காகத் தான் அதிகமாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். 1931 முதல் 2013 வரையான காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் நிலை குறித்து இந்த நூலில் விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் கே.பாரதி. தேசிய இயக்க சினிமா, திராவிட இயக்க சினிமா, மிகையுணர்வு சினிமா, ‘புதிய அலை’ படங்கள், மாற்றங்களும் பின்னடைவுகளும் என்று 5 வகைகளாகப் பிரித்து அலசி ஆராய்ந்திருக்கிறார். சினிமா கண்டுபிடித்த காலத்திலிருந்து திரைப்படங்களில் கையாளப்படும் பெண் கதாபாத்திரங்களின் தன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்துப் பேசும்போது ஒவ்வொரு கருத்துக்கும் தகுந்த ஆதாரங்களைத் தருகிறார். பேராசிரியராக இருப்பதால் எளிமையான மொழி நடை நூல் ஆசிரியருக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பெண்ணியவாதிகள் மட்டும் அல்லாமல் அனைவரும் படிக்க வேண்டும். சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் அவர்களுக்கான மொழியையும் உருவாக்க வேண்டும். அதற்கான முதல் படிதான் இதுபோன்ற புத்தகங்கள்.
Book Details
Book Title தமிழ் சினிமாவில் பெண்கள் (Tamil Cinemavil Pengal)
Author கே.பாரதி (K.Bharathi)
ISBN 9788184765496
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பல்வேறு இதழ்களில் வெளிவந்த தனது கதைகளை ‘சொந்தச் சகோதரிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார் கே.பாரதி. எட்டு வயதில் திருமணம், 12 வயதில் கணவன் மரணம் என தன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தன்னுடைய நீண்ட கூந்தலை மழிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் பாகீரதியின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அட..
₹152 ₹160