-5 %
Out Of Stock
தேவாரத் திருவுலா (பாகம் 3)
டாக்டர் சுதா சேஷய்யன் (ஆசிரியர்)
₹105
₹110
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆலயங்கள்தான் மனிதனை மாண்புறச் செய்கின்றன. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் அனுபவித்துதான் சொல்லி இருக்கிறார்கள். அங்குதான் அமைதியும் பக்தியும் பக்குவப் படுத்தப்படுகின்றன. சக்தி விகடன் இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் தேவாரத் திருவுலாவின் திருத்தலங்கள் தொகுப்பு இது. இதில் விருத்தாசலம் முதல் திருநெய்த்தானம் வரை பதினெட்டு திருத்தலங்களை தரிசித்து அருள்பெறலாம். ஈசனின் திருத்தலங்களுக்கு பயணித்து, பக்தி பரவசத்தோடு வணங்கி, அப்பெருமான் நடத்திய திருவிளையாடல்களை சிறப்புடன் கண்முன்னே நிறுத்துகிறார் டாக்டர் சுதா சேஷய்யன். மேலோட்டமாக சொல்லாமல் ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லும் வழிகள், தல வரலாறு, அந்த ஊரின் சிறப்பு, கலைநுட்பம் மிகுந்த சிற்ப வேலைப்பாடு, தீர்த்த குளம், மகா மண்டபம், மூலவர், சுற்று பிராகாரங்கள்... என கோயிலுக்கே நம்மை அழைத்துச் சென்று, தேவாரப் பாடல்களைப் பாடி உருகி நிற்கும்போது, உண்மையில் நாமே உலாவந்தது போல் மெய்மறக்கச் செய்கின்றது. நிம்மதியையும் அமைதியையும் அளித்து, பெருமிதம் பொங்க வைக்கும் பயனுள்ள பக்தி நூல் இது.
Book Details | |
Book Title | தேவாரத் திருவுலா (பாகம் 3) (Thevara Thiruvula 3) |
Author | டாக்டர் சுதா சேஷய்யன் (Dr.Sudha Shesayyan) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |