சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது என்றாலும், ஆன்மிகம்..
தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..? பாவம் _..
மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து வருகிறார் நூலாசிரியர் ப..
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவுத் தேடல் முக்கிய இடத்தை வகிக்கிறது. மனிதனுக்குள் துளிர் விடும் சந்தேகங்கள்தான், வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை புரிகிறது என்பதை சான்றோர் அனைவரும் அறிவர். வேதங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடு, சாஸ்திரத்தின் பின்னணி, வீட்டு விசேஷத்துக்கான வழிமுற..
டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார்? இவருடைய வாழ்க்கை எப்படியானது? இவரால..
காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வ..
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆகவே, அவர்களுக்கும் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கை ஆதாரத்துக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளத்தான்..
பிறந்தபோதே ‘செரிப்ரல் பால்ஸி’ என்ற குறைபாட்டுடன் பிறந்து, அதனால், கை, கால் - மொத்த உடலின் இயக்கத்துக்காக பகீரதப் பிரயத்தனப்பட்ட தன்னம்பிக்கை பெண்மணி மாலினி சிப்பின் சுயசரிதை. ஒரே ஒரு விரலின் இயக்கத்தை வைத்துக்கொண்டு, பள்ளியில் படித்தது, இரவும் பகலும் இடையறாது போராடி இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றது, ..
சிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகிறது. நான் ஒரு பொண்ணைக் காப்பாத்தற மாதிரி இல்லாமே என்னை ஒரு பொண்ணு காப்பாத்தற மாதிரி வாழ்க்கை அமையணும்! என்று விரும்புகிறான். அறிவிலும் அந்தஸ்திலும் அழ..
இன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது. நாட்டில் வன்முறைகள் ஆக்கிரமித்துவிட்டன. சொந்த தேசத்திலேயே அகதிகளாக நடத்தப்படுவதும், இன வாதமும், உலகம் வேடிக்கை பார்க்கும் வேதனைக் காட்சிகளும் ஒவ்வொரு..
உலகில் தோன்றியுள்ளவற்றில் மிகப் பெரிய, அற்புதமான உயிரினம் யானை! இந்திய மனங்களில் அதற்கு ஒரு தனியான இடம் என்றைக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக கேரளத்தில் அது பெற்றிருக்கும் இடம் எல்லாவற்றையும்விட உயர்வானது. மாப்ளா கலகத்தின்போது கலவரக்காரர்களால் சிறைப் பிடிக்கப்பட்டதில் ஆரம்பித்து கஜராஜனாக குருவாயூர் க..