ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் கதைகளாகவும் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அத்தகைய கதைகள், அச்சு ஊடகம் வந்த பிறகு அரியணை ஏற வாய்ப்புப் பெற்றன. கிராமியப் பாடல்கள்கூட திரைப்படம் என்..
பாலியல் கல்வி போதிக்கப்படுவது மட்டுமே, பாலியல் குற்றங்களை தடுக்கும் என்று அறிஞர்கள் பலர் கூறிவருகின்றனர். ஆனால், நம் மூத்தகுடியான அய்யன் திருவள்ளுவர் காமத்துப்பாலில் களவியலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போதித்துள்ளார். திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் புகழ்பெற்ற இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்..
பாட்டி சொல்லும் கதை வழி, ஒரு குழந்தை ஒரு செய்தியை அறிந்துகொள்கிறது. அதுபோல் இன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, செல்போன் என பல ஊடகங்கள் வழியாக அறிந்துகொள்கிறோம். புதைந்திருக்கும் வரலாற்றுக் கதைகளும்... கதைகளாக சொல்லப்படும் வரலாற்று உண்மைகளும் இன்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது ஓர் எ..
எப்படியும் -வாழலாம் என வாழ்பவர்கள் ஏராளம். இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்வை வகுத்து வாழ்பவர்கள், புகழின் சுவடுகள் அழியாமல் என்றும் நிலைத்திருக்கிறார்கள். அத்தகைய புகழ் வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் கிருஷ்ணம்மாள் _ ஜெகந்நாதன் தம்பதி...
ஸ்காந்தம்' என்று ஒரு மதமே உண்டு. கந்தனை மாத்திரமே வணங்கி பூவுலக வாழ்க்கையின் சுகங்களையும் நிம்மதியையும் பெற்று வாழ்பவர்கள் கந்தனின் பக்தர்கள். இப்போது இருக்கும் அவசரமான உலகத்தில் கடவுளைப் பற்றி சிந்திப்பதற்கான நேரம் குறைந்துவிட்டது. அதனாலேயே, பெருமை மிக்க நம் நாட்டின் புராண இலக்கியச் செல்வங்களைப் பற..
தொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெண்கல்வி, விதவை மறுமணம், பெண்..
நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத..
ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளம். அப்படிப் போராடியவர்களில் ஒருவர் & கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமைக்கு உரியவராகத் திகழும் வ.உ.சிதம்பரம் பிள்ளை. வசதியான குடும்பத்தில்..
மனிதப் பிறவிக்கு மட்டுமே சிரித்து மகிழும் உணர்வு உண்டு. நகைச்சுவை என்ன நலிந்தோருக்கு அப்பாற்பட்டதா? சில்லரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் சிரிப்பு சொந்தமானதா? அப்படி ஒரு சிலர் நினைத்தால், அந்த நினைப்பை நிர்மூலமாக்க வேண்டும் என்ற முடிவோடு இந்த நகைச்சுவைக் கதைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர் அகஸ்தியன். நான்..
இன்றைய பொருளாதார வாழ்க்கை முறையில் பணத்தை ஈட்டுவது என்பதைவிட, ஈட்டியப் பணத்தை எதில் முதலீடு செய்து பாதுகாப்பது என்பதுதான், தற்போதைய தலைமுறையின் பெருத்த சிந்தனை. பொதுவாக, சேமிப்பு-முதலீடு என்றாலே, நமக்குத் தெரிந்ததெல்லாம் ‘ஃபிக்ஸட் டெபாசிட்’ அல்லது ‘ரியல் எஸ்டேட்’தான். இவற்றையும் தாண்டி விதவிதமான முத..
சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்பு..